முதல் வாரமே அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்ட இசைவாணி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் எட்டாம் நாளான இன்று வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நடத்தப்பட்டது. மோதல், வாக்குவாதம், மனகசப்பு இடையே நடைபெற்றது முதல் டாஸ்க்.
தலைவரை தேர்வு செய்யும் டாஸ்கில் கடைசி வரை சின்ன பொண்ணு மற்றும் தாமரை தாக்குபிடித்தனர். இதில் நாட்டுப்புறக் கலையா அல்லது மேடை நாடகமா என கேட்டு தாமரை பேசியதால் கடுப்பான சின்ன பொண்ணு, தனது பலூனை தானே உடைத்துக் கொண்டு போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் முதல் வாரத்தில் வீட்டின் தலைவராக தாமரை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாமினேஷன் ப்ரோசஸ் நடத்தப்பட்டது. இதில் வீட்டின் தலைவராக இருக்கும் தாமரையை நாமினேட் செய்ய முடியாது என்பதால் மற்றவர்கள் கன்ஃபஷன் ரூமிற்கு சென்று தாங்கள் நாமினேட் செய்பவர்களின் பெயர்களை கூறினர்.

இதில் முதலாவதாக சென்ற அக்ஷரா, போலிதனமாக இருப்பதால் இசைவாணியையும், தன்னை பிடிக்காததை போல் தோன்றுவதால் சுருதியையும் நாமினேட் செய்வதாக கூறினார். அபிஷேக், நாடியா மற்றும் அக்ஷராவை நாமினேட் செய்தார். அபினய், இசைவாணி மற்றும் ராஜுவையும் நாமினேட் செய்வதாக கூறினார்.
பிரியங்கா, அக்ஷரா மற்றும் ஐக்கி பெர்ரியை நாமினேட் செய்தார். சின்ன பொண்ணு பேசுகையில் இசைவாணி மற்றும் அண்ணாச்சியை நாமினேட் செய்தார். வருண் பேசுகையில் இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார். இசைவாணி பேசுகையில், சின்னபொண்ணு மற்றும் இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்தார்.
சிபி பேசுகையில் அண்ணாச்சி மற்றும் இசைவாணி ஆகியோரை நாமினேட் செய்தார். அண்ணாச்சி பேசுகையில் அபினய் மற்றும் சிபி ஆகியோரை நாமினேட் செய்தார். மதுமிதா பேசுகையில் இசைவாணி மற்றும் நிரூப் ஆகியோரை நாமினேட் செய்தார். சுருதி கூறுகையில் அக்ஷரா மற்றும் நிரூப் ஆகியோரை நாமினேட் செய்தார்.
நிரூப் பேசுகையில் அபினய் மற்றும் வருணை நாமினேட் செய்வதாக கூறினார். ஐக்கி பெர்ரி கூறுகையில், அபிஷேக் ராஜா மற்றும் நிரூப் ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார். ராஜு பேசுகையில் அபினய் மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்வதாக கூறினார்.
நாடியா பேசுகையில் நிரூப் மற்றும் அண்ணாச்சி ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார். பாவனி பேசுகையில், நிரூப் மற்றும் சிபி ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார். கடைசியாக பேசிய வீட்டின் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்ட தாமரை, சின்ன பொண்ணு மற்றும் மதுமிதா ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார்.
நாமினேஷன் ப்ரோசசில் அதிகபட்சமாக 6 பேரால் இசைவாணி நாமினேட் செய்யப்பட்டார். இதனால் முதல் ஆளாக இசைவாணி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











