தி க்ரே மேன் பிரிமீயர் ஷோவில் மாஸ் என்ட்ரி.. எங்கப் போனாலும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காத தனுஷ்!
மும்பை : தி க்ரே மேன் படம் நாளைய தினம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அவற்றில் தனுஷ் பங்கேற்று வருகிறார்.
அமெரிக்காவில் துவங்கி மும்பையிலும் படத்தின் பிரமோஷன்களில் அவர் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களுடன் இணைந்து ஈடுபட்டார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய எல்லையை கோலிவுட்டில் மட்டும் சுருக்கி கொள்ளாமல் தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என தொடர்ந்து விரிவுப்படுத்தியுள்ளார். தற்போது வாத்தி என்ற அவரது படம் தெலுங்கிலும் Sir என்ற பெயரில் உருவாகிவருகிறது.

தெலுங்கில் என்ட்ரி
இதன்மூலம் அவர் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதன் சூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருடைய திருச்சிற்றம்பலம் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தி க்ரே மேன் ரிலீஸ்
இதனிடையே அவருடைய ஹாலிவுட் படமான தி க்ரே மேன் நாளைய தினம் நேரடியாக நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சிறப்பான பிரமோஷன்களில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டுள்ளனர். முதலில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரமோஷன்களில் தனுஷ் கலந்துக் கொண்டார்.
Recommended Video

சூப்பர் ஹேர்ஸ்டைல்
இதில் சிறப்பான ஹேர்ஸ்டைலுடன் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அவரை பார்க்க முடிந்தது. அவரது மகன்களையும் அவர் உடன் அழைத்து சென்றிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்ற படத்தின் பிரீமியர் ஷோவில் வேட்டி சட்டையுடன் தனுஷ் கலந்துக் கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

பிரீமியர் ஷோவில் வேட்டி சட்டை
ஹாலிவுட் படத்தில் நடித்தாலும், அந்தப் படத்தின் பிரீமியர் ஷோ அதுவும் மும்பையில் நடைபெற்ற பிரீமியர் ஷோவில் அவர் வேட்டி சட்டையில் கலந்துக் கொண்டது சிறப்பான விமர்சனங்களை கொடுத்துள்ளது. ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அவருடன் இதில் படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

வேட்டி சட்டையில் தனுஷ்
தமிழ் நடிகர்கள் சமீப காலங்களில் சினிமா தொடர்பான விழாக்களில் வேட்டி சட்டை அணிவதை வழக்கமாக்கி வருகின்றனர். இங்கு அது ஓகேதான். ஆனால் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் கூட இதை கடைப்பிடிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார் தனுஷ். அவரின் இந்த செயல் அனைவரின் வரவேற்பிற்கும் உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











