நேற்று அனிதா.. இன்று ரியோ.. பால் டாஸ்க்கில் கட்டம் கட்டப்படும் ஆரி.. அதிரடி புரமோ!
சென்னை: இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஆரியை அனைத்து ஹவுஸ்மேட்ஸுமே கார்னர் செய்கிறார்கள்.
பாலாஜி, ரம்யா, அனிதா, அர்ச்சனா ஆகியோரின் இன்ஃபுளுயன்ஸில் ஆரியை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள்.

ஆரியை சிக்க வைத்து
ஃபன் டாஸ்க் என்றாலும் அதை சீரியஸாக கொண்டு சென்று ஆரியை சிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் ஆரியும் நேர்மையும் அவர் விளையாடும் விதமும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டதால் ஹவுஸ்மேட்ஸின் நரித்தந்திரம் பெரிதாக எடுபடவில்லை.

அனிதா ஆர்ப்பாட்டம்
நேற்றைய எபிசோடில் அனிதா, ஆஜித், ரம்யா, ஷிவானி என பலரும் ஆரி மீது பலமுனை தாக்குதல் நடத்தினர். இதுவே ஆரிக்கு ஸ்ட்ரென்த்தாக உள்ளது. அனிதா ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேச முயற்சித்தாக புரஜெக்ட் செய்து ஆர்ப்பாட்டம் பண்ணினார்.

அனுதாபம் தேடிய அனிதா
அவருக்கு ரம்யா, பாலாஜி ஆகியோரும் ஒத்து ஊதினர். அனிதா அவ்வளவு பர்ஃபாமன்ஸ் செய்யும் அளவுக்கு ஆரி ஒன்றும் தவறாக பேசவில்லை. சொல்லப் போனால் அவரை பேசவே விடவில்லை. ஆனால் அனிதா அழுது புலம்பி அனுதாபம் தேட பார்த்தார்.

வச்சு செய்த நெட்டிசன்ஸ்
நிஷாவை போன்று குடும்பத்தை பற்றி பேசியதாக கூறி ஆரியை வெளியே அனுப்ப வேண்டும் என்ற அவரது திட்டத்தை புரிந்து கொண்ட ரசிர்கள் அனிதாவை வச்சு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை கன்னாபின்னாவென விமர்சித்து வருகின்றனர்.

பால் கேட்ச் டாஸ்க்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோ ஆரியை கட்டம் கட்டியுள்ளார். அதாவது பிக்பாஸ் பால் கேட்ச் என்ற தலைப்பில் ஃபன் டாஸ்க் கொடுத்துள்ளார்.

இன்றைய டாஸ்க்
இதற்காக கார்டன் ஏரியாவில் பிரத்யோக செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வரும் சிறிய பந்துகளை பிடித்தால் 5 மதிப்பெண்களும் பெரிய பந்துகளை பிடித்தால் 10 மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கார்டன் ஏரியாவில் பிரத்யோக செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வரும் சிறிய பந்துகளை பிடித்தால் 5 மதிப்பெண்களும் பெரிய பந்துகளை பிடித்தால் 10 மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரியிடம் எகிறிய ரியோ
இதில் விளையாடும் போது, ஆரி எதையோ கேட்க, இதற்காகவே காத்திருந்தது போன்று எகிறுகிறார் ரியோ. அதாவது இங்க வந்து கேள்வி கேட்கிறத விட்டுட்டு உங்க டீம்ல நடந்தத ஃபர்ஸ்ட் கேளுங்க என்று ஆரியிடம் முகத்தை காட்டுகிறார் ரியோ.

ரியோ வாக்குவாதம்
மேலும் பாலா செண்டர்ல நிக்கிறாப்ல பால் இங்க வர்றது கரெக்ட்டா தெரியுது. பாலாவுக்கு பின்னால்டி ஆஜித் நிக்கிறாப்ல. நான் எப்படி நிற்பேன் என்று ஆரியிடம் வாக்குவாதம் செய்கிறர்.

ரசித்த பாலாஜி
ரியோ ஆரியிடம் வாக்குவாதம் செய்வதை ரியோவுக்கு பின்னால் நின்று சிரித்தப்படியே ரசிக்கிறார் பாலாஜி. ஆரி மீதான கடுப்பில் ரியோவின் நெருங்கிய நண்பரான சோம் நகத்தை கடித்து துப்புகிறார். இப்படியாக உள்ளது இன்றைய முதல் புரமோ.


Click it and Unblock the Notifications











