Don't Miss!
- Finance
அதானி பங்குகள் வர்த்தக தற்காலிக சஸ்பெண்ட்.. Trading Stop அளவீட்டை எட்டியது..!
- News
வெறுப்பு பேச்சு வழக்கு.. எவ்வளவு உத்தரவு போட்டாலும் பின்பற்றுவதில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Technology
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் புகழ் அசீம்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களுடன் களைகட்டி வருகிறது.
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் காணப்படுகிறது.
கணவரை விவாகரத்து செய்த பாக்கியா தற்போது தனது தொழிலையும் குடும்பத்தினரையும் சிறப்பாக கவனித்து வருகிறார்.
இனியா
விஷயத்தில்
சண்டை
போடும்
கோபி
-ராதிகா..
தேர்தலில்
நிற்கும்
பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் சிறப்பான கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. இந்தத் தொடரில் பாக்கியா, கோபி, ராதிகா என லீட் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைமுறையை கதைக்களமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பெங்காலி தொடரின் ரீமேக்
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் கணவரை பிரிந்து தனித்து வாழும் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் காணப்படுகிறது. தற்போது கோபியை விவாகரத்து செய்த பாக்கியா, ஒரே நேரத்தில் தனது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் சிறப்பாக செய்து வருகிறார்.

ராஜ வாழ்க்கை டூ மொக்கை வாழ்க்கை
அதே நேரத்தில் திருமணமான மகனை வைத்துக் கொண்டு ராதிகாவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்ட கோபி, ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடும் நிலை காணப்படுகிறது. பாக்கியாவுடன் இருக்கும் போது ராஜ வாழ்க்கை வாழ்ந்த கோபி தற்போது, சாப்பாடு முதல்கொண்டு ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டியுள்ளது. இதனால் பல நேரங்களில் அவர் நொந்து போகும் நிலையும் உள்ளது.

ராதிகாவிடம் சண்டை
இதனிடையே அவரது மகள் மற்றும் அப்பா இருவரும் அவரது வீட்டிற்கே வந்ததால், ராதிகாவுடன் தொடர்ந்து கோபி சண்டையிடும் சூழல்களும் உருவாகியுள்ளது. தன்னுடைய மகள் மீது இருக்கும் அன்பையும் விட்டுக் கொடுக்க முடியாமல், ராதிகா மீதான காதலையும் விட முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் தவித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் அசீம் என்ட்ரி
இந்த சீரியலில் பல சுவாரஸ்யங்களை காண முடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி தொடர் ஈடுபட்டது. அப்போது ஹனிமூனுக்கு சென்ற கோபியை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வைத்து செய்தனர். இதனிடையே தற்போது பிக்பாஸ் சீசனில் அதிகமான கவனத்தை பெற்றுவரும் அசீம் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

டிவி தொடரில் அசீம்
தற்போதைய எபிசோடில் பாட்டி, ஜெனி, செல்வி, எழில் உள்ளிட்டவர்கள் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் பிக்பாஸ் புகழ் அசீம் வரும் காட்சிகள் காணப்படுகின்றன. அதில் ஷிவானியும் காணப்படுகிறார். அந்த காட்சிகள் பகல் நிலவு தொடரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.