தமிழ்நாட்டு பாரம்பரியத்தை சொல்லிக் கொடுத்த ஜிபி முத்து..வம்பிழுத்த புகழ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து இருந்து வருகிறது.
ரசிகர்களின் ஸ்ட்ரெசை குறைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி குக்குகள் மற்றும் கோமாளிகளை வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது துவங்கி நடைபெற்று வரும் நிலையில், புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 சீசன்களை சிறப்பாக இந்த நிகழ்ச்சி முடித்துள்ள நிலையில், தற்போது 4வது சீசனை துவக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் இணைந்துள்ளனர்.

குக்காக மாறிய ஷிவாங்கி
கடந்த சீசன்களில் கோமாளியாக வந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கயுள்ளார். அவருடன் இணைந்து கோமாளிகளாக செயல்பட்ட புகழ், மணிமேகலை உள்ளிட்டவர்கள் தற்போதும் கோமாளிகளாக நீடித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ப்ரமோ வெளியிட்ட விஜய் டிவி
வார இறுதி நாட்களில் ரசிகர்களை கவரும் வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்தப் ப்ரமோக்கள் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும்படி செய்து வருகிறது.

வித்தியாசமான சேலஞ்சுகள்
கடந்த வாரத்தில் பிரியாணி சேலஞ்சை குக்குகளும் கோமாளிகளும் எதிர்கொண்ட நிலையில், அடுத்தடுத்த வித்தியாசமான சேலஞ்ச்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள அடுத்த சேலஞ்சில் பிரான்சிலிருந்து பங்கேற்றுள்ள ஆன்ட்ரின் மற்றும் ஜிபி முத்து இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.

ஆன்ட்ரினுடன் இணைந்த ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சியின்போது ஆன்ட்ரின் டேபிளுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற நடுவர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜிபி முத்து, புகழ் உள்ளிட்டவர்களை கைக்காட்டுகிறார். தர்ஷனும் வந்ததாக கூறுகிறார். இதையடுத்து, அந்த டேபிளில் ஜிபி முத்து என்ன செய்தார் என்று புகழ் கேள்வி எழுப்புகிறார்.

பாரம்பரியம் கற்றுக்கொடுத்த ஜிபி முத்து
இதையடுத்து ஆன்ட்ரினுக்கு தமிழ்நாட்டு பாரம்பரியத்தை தான் கற்றுக் கொடுத்ததாக ஜிபி முத்து கூறுகிறார். இவ்வாறு கலகலப்பாக இந்த கலகலா சேலஞ்ச் செல்கிறது. இந்த வார நிகழ்ச்சியில் கூடுதல் அட்ராக்ஷனாக குக் ஷிவாங்கியுடன் கோமாளி மணிமேகலை இணைந்துள்ளார். மணிமேகலை குறித்து ஷிவாங்கி கருத்து சொல்வதாக நிகழ்ச்சி செல்கிறது.


Click it and Unblock the Notifications











