பண்டிகை கால தின்பண்டங்களை செய்ய செப் தாமு கொடுத்த சூப்பர் ஐடியா.. நீயா நானாவில் சுவாரஸ்யம்!
சென்னை : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் பேவரிட்டாக காணப்படுகிறது. நிகழ்ச்சியின் ஒரே தொகுப்பாளராக கோபிநாத் காணப்படுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நார்த் இந்தியா மற்றும் சௌத் இந்திய பலகாரங்கள் குறித்து சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டது. இரு தரப்பினரும் இந்த விவாதங்களில் பங்கேற்று, தங்களது இனிப்புகள் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியில் பிரபல செப் தாமு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வட மற்றும் தென்னிந்திய தின்பண்டங்கள் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நீயா நானா ஷோ
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரே தொகுப்பாளராக இத்தனை ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கோபிநாத். இவருடைய சிறப்பான தொகுப்பால் இந்த நிகழ்ச்சி ஆண்டுகளை கடந்து களைகட்டி வருகிறது.

நியாயமான பதிவுகள்
இந்த நிகழ்ச்சியை பார்த்து பல விவாத நிகழ்ச்சிகள் துவங்கப்பட்ட போதிலும், அவை அனைத்தும் ரசிகர்களை கவர தவறிவிட்டன. நீயா நானா ஷோவின் முக்கிய அம்சமே ஒரு டாப்பிக்கை எடுத்துக் கொண்டு, அதற்கு இரு தரப்பினரின் கருத்துக்களை நியாயமான முறையில் பதிவு செய்வதுதான்.

தொகுப்பாளர் கோபிநாத்
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் அதிகமான பேசாமல் பங்கேற்பாளர்களை அதிகமாக பேச வைப்பார். அவர்கள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். கடந்த வாரத்தில் தீபாவளியையொட்டி வட மற்றும் தென்னிந்திய பலகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர் செப் தாமு
இதில் இரு தரப்பினரும் தங்களது தின்பண்டங்கள் மற்றும் அதன் சிறப்புகளை பதிவு செய்தனர். இருதரப்பிலும் சிறப்பான தின்பண்டங்கள் குறித்து அவர்கள் பேசினர். இதனிடையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக செப் தாமு கலந்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவில் அதிரசம் செய்வது மிகவும் சவாலானது என்று தெரிவித்தார்.

செப் தாமு ஐடியா
இதனிடையே மாறிவரும் சமூகத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பண்டிகைக் கால தின்பண்டங்களை செய்தால் அதன்மூலம் தின்பண்டங்களை செய்வது மிகவும் எளிதானதானதாக மாறும் என்றும் செப் தாமு தெரிவித்துள்ளார். இந்த எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறப்பான தின்பண்டங்கள்
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் வாழும் வட இந்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்ள் இருவரும் தங்களது தின்பண்டங்கள் குறித்து கடந்த வாரத்தில் பேசியதை பார்க்க முடிந்தது. மேலும் நிகழ்ச்சியில் இதுவரை பார்க்க முடியாத பல இனிப்புகளை அவர்கள் அறிமுகம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











