பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கர்ப்பமாகியுள்ள ஐஸ்வர்யா.. உற்சாக கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்!

சென்னை : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கூட்டுக் குடும்பத்தின் பெருமையை சொல்லும் வகையில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.

அண்ணன் தம்பிகள் மட்டுமில்லாமல், அவர்கள் வீட்டில் வாழ வந்த பெண்களும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் தழைக்கும் என்பதை இந்த தொடர் வெளிப்படுத்தி வருகிறது.

எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதன் ரகசியம் இந்தத் தொடரில் சிறப்பாக காட்டப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தை இந்தத் தொடர் பார்ப்பவர்களுக்கு கொடுத்து வருகிறது.

அண்ணன் -தம்பிகள் பாசம்

அண்ணன் -தம்பிகள் பாசம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு அண்ணன் -தம்பிகள் மட்டுமில்லாமல் அவர்களுயை மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பதையே கதைக்களமாக இயக்குநர் கொண்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்படும் அதீதமான பாசம், நேசம், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது என இதுபோன்ற பந்தங்கள் நமக்கும் வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி விடுகிறது.

குடும்ப ஒற்றுமைக்கு முக்கியத்துவம்

குடும்ப ஒற்றுமைக்கு முக்கியத்துவம்


இந்தத் தொடரிலும் இவர்களது உறவுநிலையை குலைக்கும் நோக்கத்தில் காய் நகர்த்தும் கேரக்டர்கள் இருக்கின்றன. அவற்றின் சூழ்ச்சியில் சில தடுமாற்றங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சந்திக்கின்றனர். ஆனாலும் குடும்ப ஒற்றுமைக்கே இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

தாங்கிப் பிடிக்கும் தூண்கள்

தாங்கிப் பிடிக்கும் தூண்கள்

இந்தக் குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தூண்களாக மூத்த அண்ணன் மற்றும் அணி, மூர்த்தி மற்றும் தனம் உள்ளனர். மூர்த்தி தனது தம்பிகளை காக்க நினைப்பதுடன், தனமும் அவர்களை விட்டுக் கொடுக்காத நிலையையே தொடர்ந்து சீரியலில் வெளிப்படுத்தி வருகிறார்.

கர்ப்பமான முல்லை

கர்ப்பமான முல்லை

இந்தத் தொடரில் முல்லைக்கு தாய்மை பாக்கியம் கிடைக்காது என்று கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். மீனாவிற்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது முல்லையும் கர்ப்பமாக உள்ளது, அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

ஐஸ்வர்யாவும் கர்ப்பம்

ஐஸ்வர்யாவும் கர்ப்பம்

இதனிடையே தற்போது குடும்பத்தில் இளைய தம்பி, கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரின் அளவற்ற சந்தோஷம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கண்ணன் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய அண்ணன்களை கட்டிப்பிடித்து தான் அப்பா ஆகப் போவதாக கூறுகிறார்.

கண்ணனை கலாய்க்கும் மீனா

கண்ணனை கலாய்க்கும் மீனா

அவரது உற்சாகத்தை அடுத்து அவரை மீனா கலாய்க்கிறார். அப்பா தானே ஆகியிருக்கிறாய். பூமியையே தலைகீழாக கவிழ்த்ததை போல இந்த சுத்து சுத்துகிறாயே என்று அவர் கண்ணனை வம்பிழுக்கிறார். கல்யாணம் ஆனால் எல்லாருக்கும் நடப்பதுதான் என்றும் கூறுகிறார். இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X