Thalapathy68: விஜய்யுடன் மோத தயாராகும் வில்லன்.. தளபதி 68ல் மோகனுடன் களமிறங்கும் அடுத்த நடிகர்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய அடுத்தப்படமான தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் விஜய் இணைந்துள்ளார்.
தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மோதும் 2 வில்லன்கள்: நடிகர் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் ஒரளவிற்கே பூர்த்தி செய்துள்ளது. வில்லன் சேப்டர் மற்றும் LCU போன்றவற்றில் லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டு விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
சர்வதேச அளவில் இந்தப் படத்தின் முதல்நாள் கலெக்ஷன் 140 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாரயிறுதி மற்றும் பூஜை விடுமுறையை தொடர்ந்து படத்தின் கலெக்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் பெரிய நடிகர்களின் படங்களின் போட்டி எதுவும் இல்லாமல் சோலோ ரிலீசாக வெளியாகியுள்ளதும் படத்தின் வசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தன்னுடைய தளபதி 68 படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில், சென்னையில் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பாடல் காட்சியை தொடர்ந்து 2வது ஷெட்யூலும் துவங்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலிலிருது நடிகர் விஜய்யுடன் அஜ்மல் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். விரைவில் படக்குழு வெளிநாட்டிற்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்தப் படத்தின் வில்லனாக பிரபல நடிகர் மைக் மோகன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக உருவம் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்த நிலையில், தற்போது விஜய்க்கு வில்லனாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே விஜய்யுடன் இந்தப் படத்தில் இரண்டு வில்லன்கள் மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் எஸ்ஜே சூர்யாதான் அந்த இரண்டாவது வில்லன் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவர் வில்லனாக இல்லாமல் கேரக்டர் ரோலில் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மாநாடு படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்திருந்த எஸ்ஜே சூர்யா தற்போது இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். பிரபல இயக்குநராக பல மாஸ் படங்களை கொடுத்துள்ள எஸ்ஜே சூர்யா, தற்போது நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











