விக்ரம் வெற்றிக் கொண்டாட்டம்.. கொண்டாட்டம்னா விருந்து இல்லாமலா.. 40 வகையான உணவுகளுடன் விருந்து!
சென்னை : விக்ரம் படத்தின் வெற்றி அதிரிபுதிரியாக காணப்படுகிறது. சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய்களை கடந்த 15 நாட்களில் வசூலித்துள்ளது.
இதையடுத்து சென்னை ரேஸ் கோர்சில் படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

விக்ரம் படத்தின் வெற்றி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் சர்வதேச அளவில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து 15 நாட்களை தாண்டியும் பெற்று வருகிறது. சர்வதேச அளவில் கடந்த 15 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் 350 கோடிகளை தாண்டியுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்
இந்தியாவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாகியுள்ள நிலையில் சர்வதேச அளவில் இந்தியாவை தாண்டி மட்டுமே 100 கோடி ரூபாய்களை வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திராவிலும் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது.

வெற்றிக் கொண்டாட்டம்
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை ரேஸ் கோர்சில் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் வெற்றி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பான விருந்து
வெற்றிக் கொண்டாட்டம் என்றால் விருந்து இல்லாமலா என்பதையும் இந்த விழா சிறப்பாகவே எடுத்துக் காட்டியது. இனிப்புகள், சூப்கள், ஸ்டார்ட்டர்கள், பிரியாணி, இடியாப்பம் -பாயா, சாலட், ஐஸ்கிரீம் என 40 வகையான விதவிதமான உணவுகள் இந்த விழாவில் பரிமாறப்பட்டுள்ளன.

கமல் அருகில் லோகேஷ்
இந்த விழாவின் சிறப்பம்சமாக தன்னுடைய மானசீக குருவான கமல்ஹாசனுடன் பக்கத்தில் உட்கார்ந்து லோகேஷ் உணவை சாப்பிட்டுள்ளார். அவருடைய படங்களை பார்த்துத்தான் தான் இயக்கத்தையே கற்றுத் தேர்ந்ததாக முன்னதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் பேச்சு
இந்த சக்சஸ் மீட்டில் கமல், லோகேஷ் உள்ளிட்டவர்கள் படம் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ், இந்த வெற்றி தனக்கான பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளதாக, இன்னும் உத்வேகமாக அடுத்தப் படத்தில் உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக கைக்கொடுத்த விக்ரம்
நடிகர் கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாராப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தற்போது நடத்தப்பட்டுள்ள சக்சஸ் மீட்டும் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் பேசிய லோகேஷ், இந்த வெற்றி தனக்கான பொறுப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக விக்ரம் 3 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் 3 படத்தையும் கமல் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை விக்ரம் படத்தின் பிரமோஷனின்போதே அவர் அறிவித்து விட்டார். அடுத்ததாக தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணையவுள்ள லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து கைதி 2 அல்லது விக்ரம் 3 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 பட அறிவிப்பு
தளபதி 67 படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. விஜய் பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











