Ilaiyaraaja: ஐஐடி மெட்ராசுடன் இணைந்த இசைஞானி.. இளையராஜா பெயரில் இசை கற்றல் & ஆராய்ச்சி மையம்!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் அடுத்தடுத்த முயற்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அவரது பயோபிக் தனுஷ் லீட் கேரக்டரில் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் இசையமைக்கப் போவதில்லை என்றும் அவரது பழைய படங்களின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்ஐ பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு மிகவும் விருப்பமான சிம்பொனி இசையிலும் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளதாக சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ மூலம் உற்சாகத்தை பதிவிட்டிருந்தார் இளையராஜா. இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இளையராஜாவின் புதிய முயற்சிக்கான அடித்தளம் இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

Inauguration of Music director Ilaiyaraaja centre for Music learning and research in IIT Madras

இசைஞானி இளையராஜா: இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவரது பல படங்கள் இவருக்கே போட்டியாக அமைந்தன. எண்பதுகளிலும் 90களிலும் இவரது பாடல்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை என்ற அளவில் விமர்சனங்களை பெற்றுள்ளார். தற்போதும் தனிமையில் இருக்கும் போது இளையராஜாவின் பாடல்களே துணையாக வைத்து ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். இதே போல காரில் தனியாக பயணம் செய்யும்போதும் அல்லது இரவு நேர பயணங்களின் போதும் இளையராஜாவின் இசை தான் அனைவருக்கும் துணை.

இளையராஜா இசைக்கச்சேரி: இளையராஜா குறித்து பேசினால் ஏராளமான விஷயங்களை பேசிக்கொண்டே போகலாம். அந்த வகையில் அவரது ஒவ்வொரு பாடலும் கவனத்தைப் பெற்று தொடர்ந்து ஹிட்டடித்து வந்தன. இவை மட்டுமல்லாமல் அடுத்தடுத்து இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார் இளையராஜா. அடுத்ததாக ஜூலை மாதத்தில் சென்னையில் இவரது இசைக்கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனிடையே தனுஷ் லீட் கேரக்டரில் நடித்து வரும் இளையராஜாவின் பயோபிக் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இளையராஜா பயோபிக்: இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போவதில்லை என்றும் அவரது பழைய பாடல்களின் இசையையும் பிஜிஎம்மையும் இந்த படத்தில் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பிரைட் விவகாரத்திலும் தொடர்ந்து சிக்கி வருகிறார் இளையராஜா. இவையெல்லாம் போதாது என்பதாக சிம்பொனி இசையிலும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவு ஏராளமான ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 80 வயதிலும் இளைஞருக்கான துள்ளலுடன் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இளையராஜா இசை கற்றல் & ஆராய்ச்சி மையம்: தன்னை குறித்துவரும் விமர்சனங்களை தான் பார்த்து வருவதாகவும் ஆனால் இது குறித்து எல்லாம் கவலை கொள்ள தனக்கு நேரம் இல்லை என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். 35 நாட்களில் சிம்பொனி இசையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவர் மாலத்தீவிற்கு சென்றிருந்த சூழலில் அங்கு வைத்து இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த புதிய முயற்சியாக சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராசுடன் ஒப்பந்தம்: இதற்கான துவக்கவிழா நிகழ்ச்சியில் இன்றைய தினம் இளையராஜா பங்கேற்றுள்ளார். இதற்காக ஐஐடி மெட்ராசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைக்கற்றல் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்தான். அதிலும் ஒரு லெஜண்ட் பார்வையில் இசையை கற்க யாருக்கு தான் கசக்கும். அந்த வகையில் இந்த இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிகப்பெரிய அளவில் மாணவர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X