Rajinikanth - கமல் வீட்டில் கால் கடுக்க காத்திருந்த ரஜினி - இப்படியும் நடந்துருக்கா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) கமல் ஹாசன் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் கால் கடுக்க நின்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது.

பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில் படம் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

incident of Rajinikanth standing at the door of Kamal Haasans house has come to light

அடையாளமாக மாறிய ரஜினி - கமல்: அப்போது ஆரம்பித்த அவர்களது பயணம் 50 வருடங்கள் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பல படங்களில் இரண்டு பேரும் இணைந்து நடித்தனர். பிறகு தனி தனி ட்ராக்கில் செல்ல முடிவெடுத்த அவர்கள் தங்களது பாதையில் ராஜபாட்டை நடத்தினர். இதன் காரணமாக இந்திய சினிமாவின் அடையாளமாக ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இப்போதுவரை திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

போராட்டங்களை சந்தித்த ரஜினி: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் என பல போராட்டங்களை சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

கோழி இன்னும் முட்டை போடலை: உதாரணமாக, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி பட யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லேட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

incident of Rajinikanth standing at the door of Kamal Haasans house has come to light

கமல் வீட்டில் காத்திருந்த ரஜினி: இந்நிலையில் அபூர்வ ராகங்கள் பட சமயத்தின்போது கமல் ஹாசன் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் காத்திருந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, அந்தப் படத்தின் சமயத்தில் கவிதாலயா நிறுவனத்தின் காரில்தான் படத்தில் நடிப்பவர்கள் அழைத்து வரப்படுவார்கள். முதலில் கார் ஸ்ரீவித்யாவை ஏற்றிக்கொண்டு பிறகு கமல் ஹாசனின் வீட்டுக்கு செல்லும். கார் வரும்வரை கமல் ஹாசன் தூங்கிக்கொண்டுதான் இருப்பார்.

உள்ளே கூப்பிடவே ஆள் இல்லை: ஸ்ரீவித்யா வந்தால் நேராக கமலின் வீட்டுக்குள் சென்று காபி சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அறிமுகம் என்பதால் கமல் கிளம்பும்வரை அவரது வீட்டு வாசலில்யே அங்கும், இங்கும் நடந்துகொண்டிருப்பார். அப்போது அவரை கமலின் வீட்டுக்குள் கூப்பிடக்கூட ஆள் இருக்காது. இதனை நடிகை சுஹாசினி பகிர்ந்திருக்கிறார். அப்படி காருக்காக காத்திருந்த ரஜினிதான் இன்று இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

ஜெயிலர்: ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும், அடுத்ததாக ஞானவேல் இயக்கத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X