ஒரே நாளில் பல இடங்களில் சோதனை.. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தயாரிப்பாளரும் பைனான்சியருமானவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மருது, ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்காரத் துரை, தங்க மகன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

பல தயாரிப்பாளரின் படங்களுக்கு பைனான்ஸும் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார், கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதுதொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியன் தேடப்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி அப்போது அவர் மீது ஏராளமான கந்துவட்டி புகார்களும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நபராக கருதப்படும் அன்புச்செழியன் வீட்லும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











