twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிகரிக்கும் கெட்ட வார்த்தைகள்.. ஆபாசங்கள்.. யூடியூப் டிரெய்லருக்கும் சென்சார் வருமா?

    |

    சென்னை: வர வர திரைப்பட டிரெய்லர்களில் ஆபாசமும், கெட்ட வார்த்தையும் மிதமிஞ்சிப் போய்க் கொண்டுள்ளன. இவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இன்றைய திரைப்படங்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் யூடியூபிற்கும் முக்கிய பங்கு உண்டு. ட்ரெய்லரில் ஏற்படும் பரபரப்பு அனைவரையும் தியெட்டரை நோக்கி வரவழைக்க வேண்டுமென ட்ரெய்லரை உருவாக்குகின்றனர்.

    சில சமயங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அவை படத்தின் மீது எதிபார்ப்பை உருவாக்கி வெற்றியடைந்த திரைப்படங்களும் உண்டு.

    ராணுவ வீரருக்கு தைரியம் சொன்ன விஜய்: வைரலாகும் ஆடியோ ராணுவ வீரருக்கு தைரியம் சொன்ன விஜய்: வைரலாகும் ஆடியோ

    ஆபாசம்

    ஆபாசம்

    திரைப்படங்களில் இடம் பெறும் சர்ச்சைக்குறிய விஷயங்களும், கெட்ட வார்த்தைகளும் சென்சார் செய்யும்போது நீக்கப்பட்டுவிடும். ஆனால் ட்ரெய்லரில்?

    அநியாயத்திற்கு அதிகரிப்பு

    அநியாயத்திற்கு அதிகரிப்பு

    சமீப காலங்களாக ட்ரெய்லரில் கெட்ட வார்த்தைகளோ ஆபாசமான விஷயங்களோ இடம் பெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்திய உதாரணம் ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள 90 எம்.எல். படத்தைச் சொல்லலாம்

    நிரம்பி வழியும் ஆபாசம்

    நிரம்பி வழியும் ஆபாசம்

    இப்படத்தின் தலைப்பு முதல் ட்ரெய்லர், ஸ்னீப் பீக், பாடல் என யூடியூபில் வெளியான அனைத்தும் ஆபாசமான வார்த்தைகளும் காட்சிகளுமே நிறைந்துள்ளன. சென்சாருக்கு பிறகு இவற்றில் சில இடங்களில் பீப் போடப்படலாம். ஆனால் எல்லோரும் கேட்ட பிறகு அதற்கு பீப் போட்டு என்ன பயன்?

    விஜய் சேதுபதியுமா

    விஜய் சேதுபதியுமா

    இது மட்டுமல்ல.. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரிலும் பீப் தான். பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் பாடல் ஒரு கெட்ட வார்த்தையோடு தான் இடம் பெற்றிருந்தது. படம் வெளியாகும்போது அந்த இடம் ம்யூட் செய்யப்பட்டாலும், அந்த பாடலின் லிரிகல் வீடியோ அதே வார்த்தையோடு தான் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறது.

    சென்சார் இருந்தும் புண்ணியமில்லை

    சென்சார் இருந்தும் புண்ணியமில்லை

    அப்போது படத்தை மட்டும் சென்சார் செய்து என்ன பயன்? இதில் குறும்படங்கள் தனி. போகிற போக்கை பார்த்தால் யூடியூபிற்கும் சென்சார் வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

    English summary
    Need to curb You Tube movie trailers, as there is a trend of increasing bad words and obscenity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X