இந்த தீபாவளி வின்னர் கோலி தான்.. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. பிரபலங்கள் குஷி!
சென்னை: டி20 உலக கோப்பை போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியதை பார்த்து ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் கொண்டாடி ட்வீட் போட்டு வருகின்றனர்.
இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் இல்லாத குறையை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தீர்த்து வைத்து விட்டது என குஷியாகி உள்ளனர்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தீபாவளி ட்ரீட் கொடுத்து விட்டார் கிங் கோலி என பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா வெற்றி
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் கடைசி பந்து வரை திகில் கிளப்பிய நிலையில், வெற்றிக்கான ரன்னை பந்துவீச்சாளர் அஸ்வின் விளாசினார். பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றதை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்களாக மாறி கொண்டாடி வருகின்றனர்.

கிங் கோலி
53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற விராட் கோலி இன்று விளையாடிய வெறித்தனமான ஆட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் அந்த கடைசி ஓவரில் நடந்த மேஜிக் எல்லாம் வேறலெவல் என நடிகர்கள் விஷால், சதீஷ், ரத்னகுமார் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கே காண்போம்.

தீபாவளி வின்னர்
மேயாத மான், ஆடை, குலு குலு உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் மாஸ்டர், விக்ரம் படங்களின் வசனகர்த்தாவுமான இயக்குநர் ரத்னகுமார் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த தீபாவளி வின்னர் கிங் கோலி தான் என்றும், அந்த உலக கோப்பையையே எடுத்து கோலி கையில் கொடுங்க என்னவொரு மேட்ச் இது என பாராட்டி உள்ளார்.

செல்வராகவன் பாராட்டு
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் Champion forever என ஏகப்பட்ட எமோஜிகளை போட்டு விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். செல்வராகவனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கோலியை கொண்டாடி வருகின்றனர்.

விஷால் குஷி
கிங் கோலி என்னவொரு கேம் பியூட்டி.. வாட் எ கம்பேக் ஃபார் இந்தியா என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா பாகிஸ்தானை பந்தாடியதை பார்த்த பின்னர் ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ராஜமெளலி பாராட்டு
ராஜமெளலி பாராட்டு கிங் கோலி.. டேக் எ பவ் என இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டு இந்தியாவின் வெற்றியை கொண்டாடி வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தை ஜப்பானிலும் வெளியீட்டு வசூல் வேட்டை நடத்தி வரும் ராஜமெளலியே கோலியை பாராட்டி இருப்பதை பார்த்த ரசிகர்கள் ராஜமெளலிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications