சுதந்திர தாகம்.. விஜயகாந்த் முதல் தல, தளபதி வரை.. ராணுவ வீரர்களாக கலக்கிய தமிழ் நடிகர்கள்!

சென்னை: பாகிஸ்தான் பார்டரில் பயங்கரவாதிகளை பல படங்களில் நம்ம கேப்டன் விஜயகாந்த் பந்தாடி இருப்பார்.
தல, தளபதி, உலகநாயகன், புரட்சி தளபதி என பலரும் ராணுவ உடையை மிடுக்காக போட்டு மிரட்டலாக நடித்துள்ளனர்.
74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராணுவ வீரர்களாக திரையில் தோன்றி நாட்டுப்பற்றை வளர்த்த நம்ம ஊர் நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.

லெஃப்ட்டு லெக்கை சுழற்றி

லெஃப்ட்டு லெக்கை சுழற்றி

கேப்டன் பிரபாகரன், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா, ரமணா என பல படங்களில் நாட்டுப்பற்றை விதைக்கும் கதைகளில் நடித்து கலக்கி இருப்பார் கேப்டன் விஜயகாந்த். லெஃப்ட்டு லெக்கை சுழற்றி தீவிரவாதிகளை இவர் பந்தாடும் விதத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் சுதந்திர வெறி பீறிட்டு எழும். இயக்குநர் திருப்பதி சாமி இயக்கத்தில் இவர் நடித்த நரசிம்மா படத்தில் ராணுவ வீரராக நடித்து கலக்கி இருப்பார்.

ஒசாமா பின்லேடனையே ஓட விட்டவர்

ஒசாமா பின்லேடனையே ஓட விட்டவர்

2001ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்திலேயே ராணுவ வீரராகவும், சைக்கோ கொலைகாரனாகவும் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியவர் கமல்ஹாசன். விஸ்வரூபம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும், ராணுவ வீரராக நடித்த இவர், ஒசாமா பின்லேடன் அழியவும் காரணமாக இருந்ததாக திரைக்கதையை அழகாக வடிவமைத்து இருப்பார். போர்கள் கூடாது என "அணு விதைத்த பூமியிலே" பாடலையும் பாடியிருப்பார்.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மேஜர் கே. சூர்யா எனும் ராணுவ வீரராக சூர்யா பக்காவாக நடித்து இருப்பார். அனல் மேலே பனித்துளி பாடலில் சூர்யாவின் ராணுவ வீரர் தோற்றம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்

தளபதி விஜய்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி படத்தில் துணிச்சலான ராணுவ அதிகாரியாக தளபதி விஜய் ஜெகதீஷ் எனும் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். பயங்கரவாதிகள் மும்பையில் செய்யத் துடிக்கும் குண்டு வெடிப்புகளை திருமணத்துக்கு வந்த தனது ராணுவ வீரர்களுடன் முறியடிக்கும் காட்சி வேற லெவலில் ஹிட் அடித்தது. 100 கோடி கிளப்பிலும் இந்த படம் இணைந்து வசூலிலும் வேட்டை ஆடியது.

தல அஜித்

தல அஜித்

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் விவேகம். இந்த படத்தில் பயங்கரவாதிகளை என்கவுண்ட்டர் செய்யும் ஸ்பெஷல் ஏஜெண்ட் ஏ.கே. எனும் அஜய் குமாராக தல அஜித் குமார் நடித்து இருப்பார். பீரங்கிகள் முழங்க ராணுவ வீரர்களுக்கான ராயல் சல்யூட்டாக சர்வைவா பாடல் அமைந்து இருக்கும்.

ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் மேஜர் கதிரவனாக நடித்து அசத்திய விஷால், அந்த படத்தைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் மீண்டும் ராணுவ வீரராக கெத்துக் காட்டிய படம் ஆக்‌ஷன். ராணுவ வீரர் சுபாஷாக விஷாலும், ராணுவ அதிகாரி தியாவாக தமன்னாவும், இஸ்தான்புல்லில் பயங்கரவாதிகளுடன் செய்யும் ஆக்‌ஷன் அட்டகாசமாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X