independence day 2023: "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்".. தேசபக்தியை உணர்த்தும் தமிழ் திரைப்படங்கள்!

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த சிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியும் இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் இந்திய சுதந்திரத்தின் தியாக வரலாற்றை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

independence day 2023 patriotic top 5 movies in kollywood cinema

சுதந்திர விழாவை மகிழ்ச்சியாக சிறப்பிக்கும் வகையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேசபக்தி சம்பந்தமான திரைப்படங்கள் பல வெளியாகி உள்ளன. அந்த படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்

வீரபாண்டிய கட்டபொம்மன்: பிஆர் பந்துலு இயக்கத்தில் 1959ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றிய இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவே வாழ்ந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற வரி, வட்டி, கிஸ்தி..யாரை கேட்கிறாய் வரி.. எதற்கு கேட்கிறாய் வரி.. என்று வீறு கொண்டு சிவாஜி பேசிய வசனத்தை தொலைக்காட்சியில் இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்கும்

independence day 2023 patriotic top 5 movies in kollywood cinema

இந்தியன்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தில் லஞ்சத்தால் நாடு சீரழிந்து போவதை பொறுத்துக்கொள்ள முடியாத சேனாதிபதி, லஞ்சத்தை ஒழிக்க புறப்படுகிறார். இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வேதனையைப் பற்றி பேசும் படமாக வெளிவந்த இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

independence day 2023 patriotic top 5 movies in kollywood cinema

ஜெய்ஹிந்த்: 1994ம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் ஜெய்ஹிந்த் படத்தை இயக்கி இருந்தார். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மிகவும் நேர்த்தியாக படமாக்கி அதில் வெற்றியும் பெற்றார். தேசப்பற்று திரைப்படம் என்றாலே அந்த லிஸ்டில் முதலில் வந்து இருப்பது இந்த படம் தான்.

independence day 2023 patriotic top 5 movies in kollywood cinema

ரோஜா : மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ், வைஷ்ணவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தேசியக் கொடியை தீவிராவதிகள் எரிக்க முயல்வதும் அந்த நெருப்பில் புரண்டு நாயகன் தேசியக் கொடியின் மரியாதையைக் காப்பாற்றுவதுமான காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

ஹே ராம்: 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஹே ராம். இதில், ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் பாடம் கற்றுக்கொடுத்த ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X