சுதந்திர தின ஸ்பெஷல்.. அஞ்சான், கதிவஇ, சிநேகாவின் காதலர்கள்!

By Shankar

இன்று சுதந்திர தின சிறப்பாக மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

சூர்யாவின் அஞ்சான், பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் சிநேகாவின் காதலர்கள் ஆகிய படங்கள்தான் அவை.

அஞ்சான்

அஞ்சான்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம்தான் இன்றைய வெளியீடுகளில் மிக பிரமாண்டமானது. சூர்யாவின் படங்களிலேயே பெரிய பட்ஜெட், ஏகப்பட்ட திரையரங்குகளுடன் வெளியாகும் படம் இது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

பார்த்திபன் நடிக்காமல், இயக்கியுள்ள படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அநேகமாக அவர் நடிக்காமல் இயக்கியுள்ள முதல் படம் இதுதான். வித்தியாசமான விளம்பரங்களால் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளார். அட்வான்ஸ் புக்கிங்கும் ஆரோக்கியமாகவே உள்ளது.

உதவிகள்

உதவிகள்

இந்தப் படம் வெளியாவதையொட்டி அவர் ரூ 10லட்சத்தை ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு நன்கொடையாகத் தருகிறார். மேலும் சில நலத்திட்ட உதவிகளையும் செய்கிறார் இன்று. 210 அரங்குகளில் தமிழகம் முழுக்க வெளியாகிறது இந்தப் படம்.

சிநேகவின் காதலர்கள்

சிநேகவின் காதலர்கள்

பத்திரிகையாளர், பிஆர்ஓ முத்துராமலிங்கன் இயக்கியுள்ள முதல் படம் சிநேகாவின் காதலர்கள். கதையின் ஒரு பகுதி தருமபுரி இளவரசனை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு பெரிய படங்களுக்கு மத்தியில், துணிச்சலாக வெளியாகிறது சிநேகாவின் காதலர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X