தமிழா தமிழா..நாளை நம் நாடே.. தமிழ் சினிமாவில் தேசபக்தியை தூண்டும் பாடல்கள்!
சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைக்க உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவரின் மனதிலும் தேசப்பற்று ஊறியிருக்க வேண்டும், நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பல பாடல்கள் வெளியாகி உள்ள அந்த பாடல்கள் சிலவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாம் இருவர்: நாட்டுப்பற்று, சுகந்திரம், குடியரசு தினம் வந்தால், இந்த பாடல் பிரதான இடத்தை பிடித்து விடும். 1947ம் ஆண்டு வெளியான நாம் இருவர் படத்தில் வரும் மகான் காந்தியே மகான் பாடல். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி, வி. கே. ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசை அமைத்திருந்தார்.

தாயின் மணிக்கொடி: 1994ம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாயின் மணிக்கொடி. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பியின் கர்ஜனையில் உருவான பாடல் தான் தாயின் மணிக்கொடி.. தாயின் மணிக்கொடி பாடல், 90ஸ் ரசிகர்களுக்கு பிடித்தமான இந்த பாடல் இல்லாமல் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடப்பது அரிது.
கப்பலேறிப் போயாச்சு: 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இடம் பெற்ற கப்பலேறிப் போயாச்சு பாடலுக்கு வாலியின் வரிகளில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார். நாட்டுப்பற்று, வீரம், காதல் என அனைத்து உணர்வுகளையும் ஒரே பாடலில் வாலி உள்ளடக்கியிருப்பார். ரகுமானின் மெட்டும், பின்னணி இசையும் இந்த பாடலை எவர் கிரீன்ஆக்கிவிட்டது.
வந்தே மாதரம் : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான வந்தே மாதரம் பாடலை ஆல்பமாக வெளியிட்டார். பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல், நாட்டுப் பற்றை மக்கள் மனதில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தட்டி எழுப்பியது. ரகுமானின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒன்று.
தமிழா தமிழா: மணி ரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா நாளை நம்நாடே பாடல் உண்மையில் நம் தேச உணர்வை தூண்டும் படலாக இருக்கும். வைரமுத்து பாடல் வரியில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரிஹரன் பாடிய இந்த பாடல், சுதந்திர தினத்தில் தொலைக்காட்சி மற்றும் சோஷியல் மீடியாவில் பிரதான இடத்தை பிடித்து இருக்கும்


Click it and Unblock the Notifications











