Just In
- 2 hrs ago
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- 2 hrs ago
அருண் விஜய்யின் அடுத்த மிஷனில் இணைந்த புதுமுக நடிகை.. அது என்ன மிஷன் தெரியுமா?
- 3 hrs ago
பிரபல ரஜினி பட நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை 26 வயதில் திடீர் மரணம்.. சோகத்திதில் பாலிவுட்!
- 4 hrs ago
ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?
Don't Miss!
- Sports
இதுக்கு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. சொல்ல சொல்ல கேட்காமல் மாட்டிக் கொண்ட சீனியர் வீரர்!
- News
உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய்யுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் இந்துஜா புகைப்படம்!
சென்னை: பிகில் படத்தில் வேம்புவாக நடித்த நடிகை இந்துஜா, தனது பிறந்த நாளை பிகில் குழுவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.
மேயாதமான் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுக்களை அள்ளிய இந்துஜா, தொடர்ந்து, மெர்க்குரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நவம்பர் 15 அன்று வெற்றிநடை போட்டு வரவிருக்கிறான் சங்கத்தமிழன்
|
சிங்கப்பெண்
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படத்தில் சிங்கப்பெண் வேம்புவாக இந்துஜா நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கேப்டன் தென்றலுக்கு அடுத்தபடியாக இந்துஜா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யுடன் நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பேட்டிகளில் இந்துஜா கூறியுள்ளார்.

விக் ட்ரோல்
பிகில் திரைப்படத்தில் வேம்புவாக நடித்த இந்துஜா, தலையில் விக் வைத்து பாய் கட்டிங் ஹேர் ஸ்டைலில் படம் முழுக்க வந்திருப்பார். சமூக வலைதளங்களில் அவரது ஹேர் ஸ்டைலை பார்த்த பலரும் அது குறித்த ட்ரோல்களையும் மீம்களையும் பதிவிட்டு அவரை வெறுப்பேற்றினர்.

மறக்க முடியாது
பிகில் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது இந்துஜாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்துஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் அட்லி மற்றும் சக கால்பந்தாட்ட நடிகைகள் கலந்து கொண்டனர். தனது வாழ்நாளில் இந்த பிறந்த நாளை மறக்கவே முடியாது என இந்துஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா
இந்துஜாவின் பிறந்த நாள் விழா கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்பட்டது. 1994ம் ஆண்டு பிறந்த இந்துஜா, தனது 25வது பிறந்த நாளை பிகில் படக்குழுவுடன் கொண்டாடினார். ஆனால், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா அய்யரின் பிறந்த நாளிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை, சமீபத்தில் தான் அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார். அதே போல இந்துஜாவுக்கும் நயன் பரிசளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.