விஜய்க்கு கிளி கொடுத்த இந்துஜா.... காக்கியில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகிறார்

Recommended Video

BIGG BOSS-ல SANDY MASTER தான் பிடிக்கும் : Indhuja interview

சென்னை: பிகில் படத்தின் சூட்டிங் நடைபெற்ற போது விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக இரண்டு கிளி கொடுத்தவர் நடிகை இந்துஜா. இப்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். காக்கியில் கமிட் ஆனதால் இப்போது உற்சாக மழையில் நனைகிறார்.

தமிழ் சினிமாவில் மேயாதமான் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். படத்தில் அவரை விட இந்துஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தில் வைபவ் தங்கையாக இந்துஜா நடித்துள்ளார்.

Indhuja female lead in VijayAntonys #Khaki

மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் என அடுக்கடுக்காக படங்களில் நடித்துவிட்ட இந்துஜா, தற்போது விஜய்யுடன் 'பிகில்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் இந்துஜா. அவர் நடித்த மகாமுனி படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இப்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'காக்கி' படத்தின் நாயகியாக நடிக்க இந்துஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரீகாந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார்கள்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் சென்னையில் நடைபெற்றது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமல், இதரக் காட்சிகளுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். தற்போது விஜய் ஆண்டனிக்கு நாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அதில் விஜய் ஆண்டனி - இந்துஜா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளனர். இதனிடயே முதற்கட்டப் படப்பிடிப்பு காட்சிகளைப் பார்த்த தனஞ்ஜெயன் இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ளார்.

சினிமாவில் புடவை, பாவாடை தாவணியில் கலக்கும் இந்துஜா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இனி மாடர்ன் பெண்ணாகவும் நடிக்கத் தயார் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இந்துஜா. சமீபத்தில் நமக்கு அளித்த பேட்டியில் பிகில் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பில் விஜய் பிறந்தநாளுக்கு இரண்டு கிளிகள் பரிசளித்ததாகவும் கூறியிருந்தார். விஜய்க்கு கிளிகள் பரிசளித்த இந்துஜாவிற்கு விஜய் ஆண்டனிக்கு ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X