வாரேவா, தளபதி 63 படத்தில் புதிதாக யார் நடிக்கிறார்னு பாருங்க
Recommended Video

சென்னை: தளபதி 63 படத்தில் இந்துஜா நடிக்கிறாராம்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் புதிதாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். மேயாத மான் படம் பார்த்தவர்களுக்கு ப்ரியா பவானிசங்கரை விட இந்துஜா மீது தான் கண்.
அந்த படம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்ட இந்துஜா தற்போது விஜய் படித்தில் அதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவர் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம்.

இந்த படத்திலும் நிச்சயம் இந்துஜா தனித்து தெரிவார் என்பதில் சந்தேகம் இல்லை. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. அதனால் சென்னைக்கு வெளியே பிரமாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் செட் போட்டுள்ளார்களாம்.
விஜய்யை வைத்துக் கொண்டு பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் கூடிவிடுகிறது. அதை கட்டுப்படுத்துவதற்குள் படக்குழுவுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











