ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்!
சென்னை : புட்ட பொம்மா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும், இசை அமைப்பாளர் தமனுக்கு எனது பாராட்டுக்கள் என்று இந்துஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. தமிழ் பெண்ணான இவர் அத்திரைப்படத்தில் வைபவ்விற்கு தங்கையாக நடித்தார். பின்பு இரண்டாவது படமாக மெர்க்குரியில் நடித்தார் இப்படம் பலரால் பாராட்டப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இந்த படத்தை பார்த்து பாராட்டினர்.

கடந்த வருடம் இந்துஜாவிற்கு சூப்பரான வருடம் என்று கூறலாம். ஆர்யா உடன் மகாமுனி மற்றும் விஜய்யுடன் பிகில் படங்களில் நடித்தார் இந்துஜா. மகாமுனி படத்தில் நடித்ததற்காக பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிகில் படத்தில் வரும் வேம்பு கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது. படம் முழுக்க விஜய்யுடன் வரும் காட்சிகள் பலரையும் கவர்ந்தது. கடந்த ஆண்டில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
சங்கராந்திக்கு தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹேக்டே, தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து திரி விக்ரம் இயக்கிய திரைப்படம் தான் அலா வைக்குந்தா புரமுலோ இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகி பல வசூல் சாதனைகள் புரிந்து வருகிறது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் மெகா ஹிட் ஆனது. அதிலும் அப்படத்தில் வரும் "புட்ட போம்மா புட்ட போம்மா" பாடல் சென்சேஷன் ஹிட் ஆனது. தற்போது அந்த பாடல் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிடிக்காதவர்களே கிடையாது அந்த அளவிற்கு பாடல் வரிகள் மற்றும் குரல் இருக்கும்.
அந்த பாடல் வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடல் தமிழ் நடிகையான இந்துஜாவிற்கு ரொம்ப பிடிக்கும் போல பாடல் வெளியானதும் அதனை பற்றி கருத்து பதிவிட்டு உள்ளார் இந்துஜா. தனக்கு மிகவும் பிடித்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது என்றும் இசை அமைப்பாளர் தமனுக்கு பாராட்டுக்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











