ஹாலிவுட் ஹீரோயினுக்கு டஃப் கொடுக்கும் பிகில் நடிகை .. என்ன சிம்ரன் இதெல்லாம் !

சென்னை : மேயாதமான், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மிகப் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை இந்துஜா.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

இதுவரை குடும்ப கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் மட்டுமே பகிர்ந்து வந்த இந்துஜா சமீபகாலமாக இலை மறை காய் மறைவாக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

லாக்டவுனில் பல்வேறு விதமான போட்டோஷூட்களில் இதுவரை யாரும் பார்த்திராத தோற்றங்களில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இந்துஜா இப்பொழுது செம ஸ்டைலிஷாக ஹாலிவுட் ஹீரோயின் போல நடை உடை என பிரமாதப்படுத்தியுள்ளதை பார்த்தா இவரது ரசிகர்கள் பலரும் ஏகபோகமாக வர்ணித்து வரும் நிலையில் நடிகைகள் வர்ஷா பொல்லம்மா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோரும் பாராட்டி வருகின்றனர்.

வெப் சீரிஸ்களிலும்

வெப் சீரிஸ்களிலும்

தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு பேசத்தெரிந்த நடிகைகள் வெகுசிலரே இருந்துவரும் நிலையில், வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழ் நடிகை இந்துஜா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார்.

ஹீரோவுக்கு தங்கையாக

ஹீரோவுக்கு தங்கையாக

இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை இந்துஜா அதற்கு முன் பல குறும்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். எனினும் மேயாத மான் திரைப்படம் பெரிய திரையில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் அந்தப் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்திய அளவில்

இந்திய அளவில்

மேயாத மான் திரைப்படம் கொடுத்த அறிமுகத்தை தொடர்ந்து பல்வேறு தனித்துவமான கதைக் களங்களை கொண்ட மெர்குரி, 60 வயது மாநிறம், பூமராங், மகாமுனி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இந்துஜா சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால் பந்தாட்ட வீரராக நடித்ததில் இந்திய அளவில் பல்வேறு மக்களுக்கும் பரிச்சயம் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும்

பெரிதும் எதிர்பார்க்கப்படும்

இத்திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்துஜாவின் சிறந்த நடிப்பிற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்று வந்த நிலையில், இப்பொழுது காக்கி, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

புது கெட்டப்பில்

புது கெட்டப்பில்

இந்நிலையில் லாக்டவுனில் படப்பிடிப்புக்கள் எதுவும் இல்லாததால், மற்ற நடிகைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான வகையில் இதுவரை யாரும் பார்த்திராத விதவிதமான தோற்றங்களில் பல்வேறு போட்டோஷூட்களை நடத்திய அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவை வைரலாகி வந்த நிலையில் தற்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல செம ஸ்டைலிஷாக புது கெட்டப்பில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.

வர்ஷா பொல்லம்மா

வர்ஷா பொல்லம்மா

ஃபிட்டான உடை ஸ்டைலிஷான கூலிங் கிளாஸ் ஸ்ட்ரெயிட்னிங் செய்த கூந்தல் என முற்றிலும் வித்தியாசமாக ஹாலிவுட் ஹீரோயின் போல காட்சியளிக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட இந்துஜா ரசிகர்களின் தொடர் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், நடிகை வர்ஷா பொல்லம்மா "என்ன சிம்ரன் இதெல்லாம், நீ செம ஹாட்டா இருக்க" எனவும், பிகில் திரைப்படத்தில் நடித்த ரேபா ஜான் " நீ ஒரு ஹாலிவுட் ஹீரோயின்" எனவும் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X