என்ன இப்படி இறங்கிட்டாங்க? இந்துஜா போட்ட கெட்ட ஆட்டம்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ!
நடிகை இந்துஜா ஆடிய ஐட்டம் சாங் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை இந்துஜா ஆடிய ஐட்டம் சாங் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.
இளம் நடிகர் துருவா மற்றும் இந்துஜா நடிப்பில் சூப்பர் டூப்பர் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏகே இயக்கி உள்ளார்.
நிறைய புது முகங்கள் நடித்தாலும், படத்தின் தயாரிப்புக் குழு காரணமாக இந்த படம் கவனம் பெறுகிறது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

எப்போது வெளியாகிறது
சூப்பர் டூப்பர் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இன்னும் இந்த படத்திற்கு சென்னை தாண்டி வேறு எங்கும் பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த படம் குறித்து இந்துஜா நேற்று புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

குத்து
இந்த படத்தில் இருக்கும் ஐட்டம் நம்பர் பாடல் ஒன்றில் இந்துஜா ஆடி உள்ளார். இதன் குட்டி புரோமோ வீடியோவைத்தான் இந்துஜா வெளியிட்டுள்ளார். இணையம் முழுக்க இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

அட எப்படி
மேயாத மான் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதேபோல் தற்போது பிகில் படத்திலும் இவருக்கு மிக முக்கியமான பாத்திரம் தரப்பட்டுள்ளது. இன்னும் சில முக்கிய ஹீரோக்களுடன் இவர் நடிக்க புக் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில்
இப்படிப்பட்ட நேரத்தில்தான் இளம் நடிகர் ஒருவரின் படத்தில் இந்துஜா குத்து பாட்டிற்கு ஆடி உள்ளார். ஜில் ஜில் ராணி என்ற அந்த பாடல் பெரிய சர்ச்சையாகி உள்ளது. மஞ்சள் உடையில் அந்த பாட்டில் அவர் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.

ஏன் இப்படி
ஏன் இந்துஜா இப்படி இறங்கிட்டாங்க, அவங்களுக்கு என்ன வாய்ப்பு வரவில்லையா? என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.அதேபோல் அவரின் டிவிட்டர் பக்கத்தில் சில ரசிகர்கள் மோசமாக கமெண்டுகளை செய்து வருகிறார்கள். இந்த படத்தில் இன்னும் முத்தக்காட்சி போன்ற நிறைய அடல்ட் விஷயங்கள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
எப்போது வெளியாகிறது
இந்துஜா நடிப்புதான் அவரை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது. அவர் அதையே பின்தொடர்ந்து முன்னணி நடிகையாக ஆகலாம். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி ஐட்டம் பாடலில் ஆடும் அளவிற்கு இறங்கிவிட்டார் என்று கேட்க தொடங்கி உள்ளனர். இந்த பாடலில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











