இனிமே இப்படித்தான்.. இந்துஜாவின் அதிரடி மாற்றம்.. வைரலாகும் கண்ணை பறிக்கும் புகைப்படங்கள்!
சென்னை: விளம்பர பட ஷூட்டிங்கிற்கு எடுத்தது போல போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நடிகை இந்துஜா.
Recommended Video
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இந்துஜா, மெர்க்குரி, பில்லா பாண்டி, பிகில் என ஏகப்பட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கிளாமர் புகைப்படம் ஆனாலும், சரி, க்யூட் லுக் புகைப்படங்கள் ஆனாலும் சரி இந்துஜா வெளியிட்டால் அது வேற லெவல் வைரல் தான்.

ரொம்ப ராயலா இருக்கு
பிரபல புகைப்படக் கலைஞர் கணேஷ் என்பவர் எடுத்துள்ள இந்த ரீசன்ட் போட்டோஷூட்டை பார்க்கும் போது, அட நம்ம சுடர்விழியா இது என ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆச்சர்யப்படும் அளவுக்குத் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ரொம்ப ராயலாகவும் இந்துஜாவின் ஒட்டுமொத்த பேரழகையும் உருட்டி திரட்டி கொண்டு வந்திருக்கும் உழைப்பும் இதில் தெரிகிறது.

விளம்பரமா
பொதுவாக நகைக்கடை விளம்பரத்துக்குத் தான் இப்படி காஸ்ட்யூம் அணிந்து கொண்டு, நகைகளை போட்டுக் கொண்டு பிரம்மாண்ட பேரழகியாக நடிகைகள் மின்னுவது வழக்கம். ஆனால், வெறும் போட்டோஷூட்டை இந்த அளவுக்கு எடுத்து தள்ளி இருக்கிறார் இந்துஜா என்பது கோலிவுட் பிரபலங்களின் கவனத்தை பலமாக ஈர்த்து இருக்கிறது.

26 வயசு
இந்த மாதம் ஆகஸ்ட் 1ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நடித்து வந்த நிலையில், பிகில் செட்டில், விஜய், ஏ.ஆர். ரஹ்மானுடன் தனது 25வது பிறந்தநாளை மறக்கமுடியாத அளவுக்கு கொண்டாடி இருந்தார்.

தேவதை மாதிரி இருக்கீங்க
செம வைரலாக பகிரப்பட்டு வரும் இந்துஜாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், அப்படியே தேவதை மாதிரி இருக்கீங்க என்றும், லாக்டவுனுக்கு பிறகு கோலிவுட்டில் பல புதிய படங்கள் உங்கள் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

வரிசையாக
கடைசியாக பிகில் படத்தில் இந்துஜா நடித்து இருந்த நிலையில், அடுத்ததாக விஜய் ஆண்டனியின் காக்கி படத்திலும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் படங்களிலும் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூக்குத்தி அம்மன் படம் திட்டமிட்டபடி இந்த சம்மருக்கு வெளியாகி இருந்தால், அந்த படத்தின் வெற்றியுடன் தனது பிறந்தநாளை இந்துஜா இந்த ஆண்டு கொண்டாடி இருப்பார்.


Click it and Unblock the Notifications