நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் நீங்களும் போடுங்க.. நடிகை இந்துஜா!

சென்னை : பிகில் வெற்றியைத் தொடர்ந்து நடிகை இந்துஜா இப்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Mask சரியா போடுங்க.. பொறுப்பா இருங்க - Vetrimaran

ஹீரோயினியாக நடித்து வரும் அதே சமயம் சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் வந்து செல்கிறார்.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படும் நிலையில் நடிகை இந்துஜா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

விவேக் பிரசன்னாவுக்கு காதலியாக

விவேக் பிரசன்னாவுக்கு காதலியாக

தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகளில் ஒருவராக உள்ள இந்துஜா ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்க அவரது தங்கையாகவும் விவேக் பிரசன்னாவுக்கு காதலியாகவும் நடித்திருப்பார்.

பிகில்

பிகில்

மெர்குரி, பில்லாபாண்டி,மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் பூமராங், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்லும் இந்துஜா பிகில் படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமாகி உள்ளார்.

வேம்பு

வேம்பு

அட்லி இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில் இதில் வேம்பு என்ற பாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக இந்துஜா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மீள முடியும்

மீள முடியும்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அதை தடுக்கும் வகையில் தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில் அதற்கு முன்னுதாரணமாக நடிகர் நடிகைகள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை இந்துஜாவும் அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது ரசிகர்களையும் தடுப்பூசி மறக்காமல் போட்டுக் கொள்ளும் படியும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த கொரோனா சங்கிலியில் இருந்து மீள முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X