twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா ஒரு வெட்கங்கெட்ட நாடு! - இயக்குநர் பா ரஞ்சித் சுளீர்

    By Shankar
    |

    மதுரை: என்னைப் பொருத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன் என்று இயக்குநர் பா ரஞ்சித் அதிரடியாகப் பேசியுள்ளார்.

    மதுரையில் ஆதித் தமிழர் கட்சி நடத்திய 'மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில்' கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாசாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.

    மனிதனை மனிதனாகப் பார்க்காத நாடு

    மனிதனை மனிதனாகப் பார்க்காத நாடு

    உண்மையில் இது நாகரிகற்ற நாடு. மனிதனை மனிதனாகப் பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்ப்பார்த்தால் எப்படி கிடைக்கும்? இந்த அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்யச் சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போயின. இந்த நிலை இனியும் தொடர வேண்டுமா?

    மக்கள் பிரதிநிதிகள் பேச மறுக்கிறார்கள்

    மக்கள் பிரதிநிதிகள் பேச மறுக்கிறார்கள்

    இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கின்றன. மனிதக் கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி சட்டமன்றம், பாராளுமன்றங்களில் பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.

    இந்த வேலை வேண்டாம்

    இந்த வேலை வேண்டாம்

    உணவுக்காகத்தானே இந்த வேலையைச் செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம். ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும். ஒரு கல்யாணம், திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.

    மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கிய நாடு இது

    மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கிய நாடு இது

    ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்கப் போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.

    ஒவ்வொரு முறையும் அம்பேத்கரை எதிர்ப்பார்க்காதீர்கள்

    ஒவ்வொரு முறையும் அம்பேத்கரை எதிர்ப்பார்க்காதீர்கள்

    நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்க இந்த வேலையை மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள். 'நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடைக் கற்களை உடைக்க வேண்டும்' என்று அம்பேத்கர் சொன்னார். ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கர் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளைக் களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டுச் செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி!" என்றார் ரஞ்சித்.

    English summary
    Director Pa Ranjith says that India is a shameless nation that makes slaves in humanity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X