இந்தியாவே அழுகிறது.. சிறந்த நடிகரை இழந்த சினிமா துறை.. பிரபலங்கள் கண்ணீர் மல்க இரங்கல்

சென்னை: இந்திய நடிகர் இர்ஃபான் கானின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்திருக்கிறது.

Recommended Video

Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் இர்ஃபான் கான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகனாக திகழ்ந்த இர்ஃபான் கானின் மரணம் இந்த லாக்டவுன் நேரத்தில் சினிமா உலகுக்கு இன்னொரு பேரிழப்பாக அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் இரங்கல்

அமிதாப் இரங்கல்

இந்தியாவின் மூத்த நடிகரும் பாலிவுட்டின் பிதாமகருமான அமிதாப் பச்சன் நடிகர் இர்ஃபான் கான் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் மனமுடைந்து போயுள்ளார். உலகளவில் இந்தியர்களை பிரபலப்படுத்திய சிறந்த நடிகர் இவ்வளவு சீக்கிரம் மரணித்து இருக்கக் கூடாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா இரங்கல்

பிரியங்கா இரங்கல்

இர்ஃபான் கானை போலவே பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, இர்ஃபான் கானின் இந்த மரண செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றுள்ளார். உங்களின் திறமையான நடிப்பு சினிமா கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்றும், இர்ஃபான் கான் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் நடிகை பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

தனுஷ் இரங்கல்

தனுஷ் இரங்கல்

"இதயமே நொறுங்கிப் போய்விட்டது. என்ன ஒரு திறமையான நடிகர் அவர். இவ்வளவு சீக்கிரத்தில் ஏன் இறக்க வேண்டும். என்னிடம் அவர் சொன்ன கனிவான வார்த்தைகள் என்றுமே எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இர்ஃபான் கானின் ஆத்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சாய் பல்லவி இரங்கல்

சாய் பல்லவி இரங்கல்

"நான் உங்களை இதுவரை சந்தித்ததே இல்லை.. ஆனால், இந்த இழப்பு என்னை ரொம்பவே பாதிப்படைய செய்து இருக்கிறது. உங்களுடைய கலைத் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன். அதுதான் இந்த துயரத்திற்கான உண்மையான காரணம், நிச்சயம் உங்களின் ஆன்மா சாந்தியடையும் என நம்புகிறேன்" என நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் இரங்கல்

ஸ்ருதிஹாசன் இரங்கல்

"குட்பை சார்.. சிறந்த நடிப்பு கலைக்கும், சினிமாவில் நீங்கள் செய்த மேஜிக்குகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சார்.. நாங்கள் உங்களை எப்போதுமே மிஸ் பண்ணுவோம்.. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் ஆழ்ந்த இரங்கல்" என நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரணிதா இரங்கல்

பிரணிதா இரங்கல்

இர்ஃபான் கானின் இந்த இரங்கல் செய்தியை அறிந்த சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை எண்ணற்ற ஹாஷ்டேக்குகளில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரணிதா, இவ்வளவு சீக்கிரம் நீங்கள் உயிரிழந்திருக்கக் கூடாது என்றும், ஆழ்ந்த இரங்கல் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமீர்கான் இரங்கல்

அமீர்கான் இரங்கல்

சக நடிகரும் நல்ல இதயமும் கொண்ட நடிகர் இர்ஃபான் கான் உயிரிழந்த செய்தி தன்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாகவும், இர்ஃபான் கானின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கள் என நடிகர் அமீர்கான் ட்வீட் போட்டுள்ளார். மேலும், இத்தனை காலம் எங்களை மகிழ்வித்த உங்களின் கலைப் பணி என்றுமே மறையாது என்றும் கூறியுள்ளார்.

ரொம்ப மிஸ் பண்றோம்

ரொம்ப மிஸ் பண்றோம்

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஜோர்டானில் சிக்கித் தவிக்கும் மலையாள நடிகர் பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த செய்தியை அறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் நிறைய செய்திருக்கிறீர்கள். நிச்சயம் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X