twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் 'துணிவு' பட திரைக்கதை..இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையின் உண்மைக் கதையா?

    |

    சென்னை: துணிவு படத்தின் கதை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் லேசாக விவாதிக்கப்படுகிறது. நேற்று அஜித் ஏகே 61 பட டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது.
    துணிவு என்று பெயரிடப்பட்ட டைட்டில் வெளியானது. இந்த டைட்டிலில் ஒரு சாய்வு நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அஜித் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது போல் வெளியிடப்பட்டது.

    தற்போது இந்த படத்தின் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் 1987 இல் நடந்த பிரபல வங்கி கொள்ளையை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட்டுள்ளது என விவாதிக்கப்படுகிறது.

    மாஸான டைட்டில்..தீப்பிடித்த சோஷியல் மீடியா..அஜித் 61 போஸ்டர்!மாஸான டைட்டில்..தீப்பிடித்த சோஷியல் மீடியா..அஜித் 61 போஸ்டர்!

    வலிமையைத்தொடர்ந்து மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லர் மூவி

    வலிமையைத்தொடர்ந்து மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லர் மூவி

    நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இந்தப்படம் போதை மருந்து குறித்த பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சென்னையில் போதை மருந்து நடமாட்டம் அதிகம் உள்ளதை தடுக்க நினைக்கும் நார்கோடிக் அதிகாரியாக அஜித் குமார் நடித்திருப்பார். இறுதியில் போதை மருந்து கும்பலை அழிப்பார். இளைஞர்களை மீட்பார். இந்நிலையில் அஜித் நடித்த ஏகே 61 படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திலும் அஜித் வித்தியாசமான கெட்டப்பில் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருப்பது போன்று வெளியாகியுள்ளது.

     35 ஆண்டுகளுக்கு முன் நடந்த வங்கிக்கொள்ளைதான் பிரதான கருவா?

    35 ஆண்டுகளுக்கு முன் நடந்த வங்கிக்கொள்ளைதான் பிரதான கருவா?

    தற்போது இந்த படத்தின் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. இந்த படத்தின் கதையும் ஒரு க்ரைம் திரில்லர் கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மையக்க மையக்கரு, 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை

    இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை

    பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய வங்கிக் கொள்ளை இது. 1987 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வங்கியில் உள்ள 5.7 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மிகப்பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது இந்தியாவையே உலுக்கியது.. 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி காலையில் ஒரு லாரி மற்றும் மெட்டடர் வேனில் வந்து இறங்கிய கொள்ளையர்கள், போலீஸ் வேடத்தில் பஞ்சாப் போலீஸ் போன்று பாதுகாப்புக்காக வந்திருப்பதாக வாங்கியினுள் நுழைந்தனர். சுமார் 20 பேர், 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட திடகாத்திரமான இளைஞர்கள் இந்தக்கொள்ளையில் திட்டமிட்டு இயங்கினர்.

     தெளிவாக திட்டமிட்டு ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்

    தெளிவாக திட்டமிட்டு ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்

    6 பேர் போலீஸ் உடையில் இருந்தனர். வங்கியின் பாதுகாப்புக்காக வந்திருப்பதாக சொல்லி வங்கிக்குள் நுழைந்தனர். போலீஸ் உடையில் இருந்ததால் யாரும் சந்தேகிக்கவில்லை. காலை 9 மணிக்கு வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் ஊழியர்கள் வரத் தொடங்கியதும், ஆயுதம் ஏந்திய ஊடுருவல்காரர்கள், அவர்களை உட்காரச் சொல்லி, துப்பாக்கி முனையில் அடக்கினர். பணத்தைப் எடுத்த பிறகு, அவர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஸ்டிராங் ரூமிற்குள் பூட்டிவிட்டு இரண்டு மெடடோர் மற்றும் ஒரு ஃபியட் காரில் சென்றனர். (இன்றும் அவைகள் கைப்பற்றபட்ட நிலையில் ஓரமாக நிற்கின்றன).

     இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கிக்கொள்ளை இது

    இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கிக்கொள்ளை இது

    இது குறித்த தகவல் வந்து போலீசார் வருவதற்குள் அவர்கள் பணத்தை தனித்தனியே பிரித்து தப்பி சென்று விட்டனர். இதன்பிறகு இந்த வழக்கில் பஞ்சாப் போலீசார் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வங்கி கொள்ளை தொடர்பாக சுமார் 20 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இதில் இவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வங்கிக் கொள்ளையை அவர்கள் நடத்திய விதம் ஆங்கில படம் போல் திட்டமிட்டதாக இருந்தது என்று அப்பொழுது பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. இந்தியாவில் நடந்ததிலேயே மிகப்பெரிய வங்கி கொள்ளை இது என்று அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அடிக்கப்பட்ட தொகையை இப்போது ஒப்பிட்டால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு வரும்.

     பஞ்சாபில் ஷூட்டிங் என்பதால் தான் இமயமலையில் சுற்றுகிறாரா அஜித்?

    பஞ்சாபில் ஷூட்டிங் என்பதால் தான் இமயமலையில் சுற்றுகிறாரா அஜித்?

    இந்த வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தான் தற்போது அஜித்தின் துணிவு படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் ஒருவேளை பஞ்சாபில் எடுக்கப்படுவதால் அஜித் அந்த பகுதியில் ஷூட்டிங் முடித்துவிட்டு அப்படியே இமயமலை பகுதியில் சுற்றி வருகிறாரோ என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படம் ஒருவேளை வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட படமாக இருந்தால், ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    The story of Thunivu is currently being discussed on social media. Ajith AK 61 movie title poster was released yesterday. The title titled Thunivu was released. The title featured Ajith reclining on a reclining chair with a gun in his hand. Currently, discussions about the story of this film have surfaced on social media. It is being discussed that the film is based on the famous bank robbery in 1987.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X