For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பம்.. தியேட்டர் அட் ஹோம் தளம் !

  |

  சென்னை: ராம் கோபால் வர்மாவின் நேக்ட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.

  https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்ட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

  இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது.

  பாதுகாக்கப்பட்டவிநியோகம்

  பாதுகாக்கப்பட்டவிநியோகம்

  படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். பைரசியை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்கு முன்னனி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி என்றும் கூறி வருகிறார்கள்

   ப்ளாக்செயின்

  ப்ளாக்செயின்

  "Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ்நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனை வழங்கியது. ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களை பாதுகாப்பாக அடைய முடிகிறது. பார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது.

  முன்னோடியாக

  முன்னோடியாக

  பணம் செலுத்தி பார்க்கும் வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலைநோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது" என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

  உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு
  மர்டர்

  மர்டர்

  ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக்பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி அதிகமாக தெளிவாக பேசும் முதல் படமாக இது இருக்கும் என்றும் சொல்லி வருகிறார்கள் . மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

  புதிய படங்களை

  புதிய படங்களை

  நேக்ட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  சினிமா வெற்றி

  சினிமா வெற்றி

  அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன. Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களது வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே, இந்த புதிய முயற்சிகள் மிகுந்த ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சினிமா இண்டஸ்ட்ரி என்ற வார்த்தை கால போக்கில் மாறி எல்லாம் கைக்குள் வந்த பின் சினிமா ஒரு சாதாரண தொழிலாக பிரம்மாண்டம் குறைந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு எழுந்து உள்ளது. ஆனால் ரசிகனின் நல்ல ரசனை உள்ள வரை எல்லா வகையிலும் சினிமா வெற்றி பெரும் என்று பலரும் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

  Read more about: ramgopal varma
  English summary
  India's first blockchain technology,Ally ott platform
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X