எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படம் ஜாங்கோ!

சென்னை : தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படைப்புகளாக வெளியாகி உள்ளது

அறிமுக இயக்குனர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பளித்து வரும் சி வி சிவகுமார் இப்பொழுது அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜாங்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள ஜாங்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறைந்த பட்ஜெட்டில் ஹிட் படங்களை

குறைந்த பட்ஜெட்டில் ஹிட் படங்களை

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், மாயவன் என பல தரமான திரைப்படங்களை தயாரித்து வருபவர் பிரபல தயாரிப்பாளர் சிவி குமார். குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அதை வெற்றிப் படங்களாக தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வரும் இவர் மாயவன் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன்

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன்

தன்னுடைய திரைப்படங்களில் பெரும்பாலும் பெரிய நடிகர்களை நடிக்க வைக்காமல் அறிமுக நடிகர்களையும் திறமை வாய்ந்த இளம் இயக்குனர்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் தயாரிப்பாளர் சிவி குமார் இப்போது அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜாங்கோ என்ற படத்தை தயாரித்துள்ளார்

டைம் லூப் பாணியில் ஜாங்கோ

டைம் லூப் பாணியில் ஜாங்கோ

பொதுவாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே டைம் லூப் என்ற ஒன்றை பயன்படுத்தி படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ஆனால் இப்பொழுது இந்தியாவில் அதுவும் தமிழில் முதல்முறையாக டைம் லூப் பாணியில் ஜாங்கோ திரைப்படம் உருவாகி உள்ளது. டைம் லூப் மையப்படுத்தி வெளியாகும் படங்கள் முதல் முறை பார்ப்பதற்கு புரியாது ஆனால் திரும்பத் திரும்ப பார்க்க புரிந்துவிடும்.

ஹாலிவுட் தரத்தில்

ஹாலிவுட் தரத்தில்

ஒரே நாளில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளின் கோர்ப்பாக உருவாகியுள்ள ஜாங்கோ படத்தில் நடிகர் சதீஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மிருணாளினி ரவி, கருணாகரன்,

ரமேஷ் திலக்,அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து கமர்சியல் படங்களை கண்டு ரசித்த தமிழ் ரசிகர்கள் இப்பொழுது ஹாலிவுட் தரத்தில் டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள தமிழ் படத்தை காண பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமான இசைக்கோர்ப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் வழங்கியுள்ளார். சூப்பர் டீலக்ஸ், எம்ஜிஆர் மகன், எனிமி ஆகிய படங்களை தொடர்ந்து மிருணாளினி ரவிக்கு இந்த திரைப்படம் மற்றுமொரு திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X