twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸ்....மகுடம் சூட்டப்பட்ட இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து

    |

    டில்லி : 70 வது மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டி இஸ்ரேல் நாட்டின் Eilat நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதாகும் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்சாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.

    Recommended Video

    Miss Universe 2021 Title Winner Harnaaz Sandhu | Harnaaz Sandhu Crowning Moment

    கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் 2000 ம் ஆண்டு லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். இதனால் ஹர்னாசிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

     Indias Harnaaz Sandhu won Miss Universe 2021 title

    பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை தோற்கடித்து ஹர்னாஸ் இந்த பட்டத்தை வென்றுள்ளார். 2020 ம் ஆண்டு மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்ட மெக்சிகோவை சேர்ந்த ஆன்டிரியா மிசா, ஹர்னாசிற்கு மிஸ் யுனிவர்சிற்கான மகுடத்தை சூட்டினார். இந்த போட்டி உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    முதல் ரன்னர் அப்பாக பராகுவேவை சேர்ந்தவரும், இரண்டாவது ரன்னர் அப்பாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவரும் தேர்வு செய்யப்பட்டனர். டாப் 3 ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹர்னாஸ் அளித்த பதிலே அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் படத்தை பெற்று தந்துள்ளது. இந்த சுற்றில், இன்றைய காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என இதை பார்த்துக் கொண்டிருக்கு இளம் பெண்களுக்கு நீங்கள் தரும் அட்வைஸ் என்ன என கேட்கப்பட்டது.

    இதற்கு, தன் மீதான நம்பிக்கை தான் இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய அழுத்தம். உங்களை தனித்துவமான அழகுடன் மாற்றிக் கொள்வது எப்படி என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள். உலகில் நடக்கும் மிக முக்கியமான விஷயங்கள் பற்றி பேசுங்கள். வெளியே வாருங்கள். உங்களைப் பற்றி பேசுங்கள்.

    ஏனென்றால் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் தலைவர். நீங்கள் தான் உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். என்னை நான் நம்புகிறேன். அதனால் தான் இன்று இங்கு நிற்கிறேன் என பதிலளித்தார் ஹர்னாஸ். இந்த அற்புதமான பதில் தான் அவரை டாப் 3 இடத்தில் கொண்டு வர வழிசெய்துள்ளது. குறைவாக பேசி, அதிகம் செயலாற்ற வேண்டும் என அவர் பேசியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. டாப் 5 இடத்திற்கான தேர்வு சுற்றிலும் காலநிலை மாறுபாடு, இயற்கை அழிக்கப்படுவது பற்றி ஹர்னாஸ் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

    ஹர்னாஸ் தற்போது Public Administration துறையில் முதுநிலை பட்டம் பயின்று வருகிறார். இவர் இதற்கு முன் 2019 ல் Femina Miss India Punjab உள்ளிட்ட பல பட்டங்களை வென்றுள்ளார். இவர் பல பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    English summary
    Harnas Chandu, a 21-year-old from the Indian state of Punjab, has been crowned Miss Universe. 70th Miss universe 2021 event was held in Isarael's Eilat on december 13th. After almost 21 years, an Indian girl has been selected as Miss Universe. Laura Dutta previously won the Miss Universe title in 2000.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X