twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    410 கோடியா.. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்த படம் இதுதானாம்.. பிரம்மாஸ்திரம் தப்பிக்குமா?

    |

    மும்பை: அஸ்திரங்களிலேயே பெரிய அஸ்திரம் பிரம்மாஸ்திரம் தான் என ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் வரும் ஆயுதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் பிரம்மாஸ்திரம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் மெளனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கேஜிஎஃப், விக்ரம் படங்களில் வித விதமான துப்பாக்கிகளை வைத்து நாயகர்கள் வித்தைக் காட்டிய நிலையில், இதிகாச அஸ்திரங்களையே கையில் ஏந்தி வருகிறார் ரன்பீர் கபூர்.

    பாலிவுட்டில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் இதுதான் என்கின்றனர்.

    இயற்கையே அழுகிறது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு.. பண்ணை வீடு உள்ள தாமரைப்பாக்கத்தில் திடீர் மழைஇயற்கையே அழுகிறது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு.. பண்ணை வீடு உள்ள தாமரைப்பாக்கத்தில் திடீர் மழை

    ஷங்கர், ராஜமெளலி

    ஷங்கர், ராஜமெளலி

    பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்றாலே இயக்குநர் ஷங்கர் மற்றும் ராஜமெளலி தான் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்திற்கே வரும். 100, 200 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் படங்களை இயக்கி வந்த நிலையில், ராஜமெளலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களை 200, 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்து 1000, 2000 கோடி என பாக்ஸ் ஆபிஸிலும் இமாலய சாதனை படைத்துள்ளார்.

    410 கோடி செலவில்

    410 கோடி செலவில்

    இந்நிலையில், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படமாக ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரம்மாஸ்திரம் படம் உருவாகி உள்ளது. அதன் ஒட்டுமொத்த பட்ஜெட் 410 கோடி ரூபாய் என்கின்றனர். இந்த படத்துக்காக சுமார் 10 ஆண்டுகள் இயக்குநர் அயன் முகர்ஜி உழைத்துள்ளார்.

    காதல், திருமணம், குழந்தை

    காதல், திருமணம், குழந்தை

    இந்த படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பிரம்மாஸ்திரம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆலியா பட் - ரன்பீர் கபூர் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஆலியா பட் கர்ப்பமே ஆகி விட்டார். இத்தனை ஆண்டு கால உழைப்பை எடுத்திருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

    ராஜமெளலி புரமோஷன்

    ராஜமெளலி புரமோஷன்

    பாலிவுட் இயக்குநர்களோ நடிகர்களோ பேசினால் அங்குள்ள ரசிகர்களே மதிக்காமல் பாய்காட் டிரெண்டிங்கை தூக்கிக் கொண்டு வந்தனர். இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலி மீது பாலிவுட் ரசிகர்கள் பெரும் அன்பு வைத்திருப்பதை அறிந்த படக்குழு அவரையே அழகாக படத்திற்கு புரமோட் செய்ய நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது.

    ஷாருக்கான் கேமியோ

    ஷாருக்கான் கேமியோ

    ராக்கெட்டரி, லால் சிங் சத்தா படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகர் ஷாருக்கான் முக்கியமான கதாபாத்திரத்தில் கேமியோவாக நடித்துள்ளார். வானர அஸ்திரா சக்தியைக் கொண்டவராக ஷாருக்கான் நடித்துள்ளதாக சமீபத்தில் வெளியான புரமோவை பார்த்து ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.

    தப்பிக்குமா

    தப்பிக்குமா

    410 கோடி ரூபாயில் துல்லியமான சிஜிக்காக செலவு செய்து இயக்குநர் அயன் முகர்ஜி இந்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் ஷம்ஷீரா சொதப்பியது போல இந்த படமும் சொதப்பி விடுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் திரைக்கதை நிச்சயம் ரசிகர்களை என்கேஜ் செய்யும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் நல்லா இருந்தால் பாய்காட் டிரெண்டிங்கையும் தாண்டி ரசிகர்கள் சப்போர்ட் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India's highest budget movie Brahmastra will escape from Boycott Bollywood trending questions raised from fans. Ranbir Kapoor, Alia Bhatt, Amitabh Bachchan, Shah Rukh Khan, Nagarjuna and Mouni Roy starrer movie will hit the screens on September 9th this month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X