அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்த கிருஷ்ணா கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகனாம்!
Recommended Video
சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என தெரிய வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இதற்காக அங்கு ஸ்பெஷல் செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

சரிந்து விழுந்த கிரேன்
இந்த காட்சி மிக உயரமான கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. அப்போது திடீரென் கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்களா 29 வயது மது, 60 வயது சந்திரன் ஆகிய 3 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

3 பேர் பலி
இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

லைகா இரங்கல்
படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். படத்தின் தயாரிப்ப நிறுவனமான லைகா, நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதனின் மருமகன்
இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என தெரியவந்துள்ளது. மதனின் இளைய மகள் அமிதாவும், விபத்தில் பலியான கிருஷ்ணாவும் காதலித்து மணந்தவர்கள். இருவரும் இணைந்து பல விளம்பரங்களும், கார்பரேட் படங்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications