twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் ரூ.1 கோடி!

    By
    |

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Indian 2 Shooting Spot | Crane Crash | Sankar Compensation

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார்.

    சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர், உட்பட பலர் நடிக்கின்றனர்.

    ஈவிபி பிலிம் சிட்டி

    ஈவிபி பிலிம் சிட்டி

    இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த 19 ஆம் தேதி நடந்த படப்பிடிப்பின்போது திடீரென கிரேன் கீழே அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது உயிரிழந்தனர். படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்தனர்

    உயிரிழந்தனர்

    இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், இது கொடூரமான விபத்து என்று தெரிவித்திருந்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1. கோடி கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    இன்னும் மீளவில்லை

    இன்னும் மீளவில்லை

    இன்னும் மீளவில்லை இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது.

    சரியான உதவி இயக்குனர்

    சரியான உதவி இயக்குனர்

    நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். சேர்ந்த சில நாட்களிலேயே மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்தபோது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.

    துக்கம் தாளவில்லை

    துக்கம் தாளவில்லை

    எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய புரொடக்‌ஷன் உதவியாளர் மதுவை அன்று மார்சுவரியில் பார்த்ததும் உடைந்துவிட்டேன். ஆர்ட் டிபார்ட்மென்ட் சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த ஷெட்யூலில்தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.

    வேதனை வாட்டுகிறது

    வேதனை வாட்டுகிறது

    எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனைதான் என்னை வாட்டி எடுக்கிறது.

    கஷ்டங்களை

    கஷ்டங்களை

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவர் மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும், மது மற்றும் சந்திரனின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிருக்கு ஈடாகாது

    உயிருக்கு ஈடாகாது

    அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன்.
    இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார். இதற்கிடையே, சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், விசாரணைக்காக இயக்குனர் ஷங்கர் நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    English summary
    Indian 2 accident, Director shankar announced Rs 1 crore to family of deceased
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X