ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதிர்ச்சி இன்னும் போகவில்லை.. வீட்டை விட்டு வெளியே செல்லாத காஜல் அகர்வால்!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உண்டான அதிர்ச்சியில் இருந்து நடிகை காஜல் அகர்வால் இன்னும் வெளியே வரவில்லை என்கிறார்கள்.

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உண்டான அதிர்ச்சியில் இருந்து நடிகை காஜல் அகர்வால் இன்னும் வெளியே வரவில்லை என்கிறார்கள்.

நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள்.

நேற்று எப்படி

நேற்று எப்படி

இந்த விபத்தின் போது நேற்று காஜல் அகர்வால் லேசான இடைவெளியில் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. காஜல் அகர்வால் இந்த விபத்து நடந்த போது படப்பிடிப்பு தளத்தில்தான் இருந்திருக்கிறார். அதாவது அவர் இருந்த கூடாரத்திற்கு மேலேதான் இந்த கிரேன் விழுந்துள்ளது. அவர் சரியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்த போதுதான் விபத்து நடந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் இந்த விபத்தில் சிக்கவில்லை. கிரேன் கீழே விழும் ஒரு நிமிடத்திற்கு முன்தான் அங்கிருந்து காஜல் அகர்வால் வெளியே வந்துள்ளார். அவர் வெளியே வந்த சில நொடிகளில் கிரேன் கீழே விழுந்துள்ளது. இதை நேரில் பார்த்த காஜல் அகர்வால் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தார். அவரின் கண்ணுக்கு முன்னேயே இந்த விபத்து ஏற்பட்டடுள்ளது.

விபத்து காரணம்

விபத்து காரணம்

இந்த நிலையில் இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் கஜால் அகர்வாலுக்கு இருக்கிறதாம். மூன்று பேரின் உயிர் இவரின் கண்ணுக்கு முன்னே பறி போய் உள்ளது. சில நிமிடங்களுக்கு முன்னே இவர் பேசிக்கொண்டு இருந்தவர்கள், உடல் நசுங்கி பலியாகி இருக்கிறார்கள்.

மனம் பாதிப்பு

மனம் பாதிப்பு

இது அவரை மன ரீதியாக பாதித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் இருந்து மனதை வெளியே கொண்டு வர காஜலுக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். இவர் தன்னுடைய வீட்டை விட்டே இன்று வெளியே சொல்லவில்லையாம். இதனால் அவர் இன்னும் சில நாட்களுக்கு ஷூட்டிங் வர முடியாது என்று கூறி இருக்கிறார். என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

அமைதி வேண்டும்

அமைதி வேண்டும்

மன ரீதியாக எனக்கு அமைதி வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்கு வர முடியாது என்று காஜல் அகர்வால் கூறிவிட்டாராம். அவ்வளவு பாதிப்பை இது ஏற்படுத்தி காஜல் அகர்வாலுக்கு இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இன்றும் காஜல் அகர்வால் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. படக்குழுவை இவரை தொந்தரவு செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X