அப்போதுதான் கமல் சென்றார்.. கடைசி நொடியில் தப்பித்த காஜல்.. இந்தியன் 2 விபத்து பற்றி ஷாக்கிங் செய்தி

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசனும், நடிகை காஜல் அகர்வாலும் கடைசி நொடியில் தப்பித்துள்ளனர்.

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசனும், நடிகை காஜல் அகர்வாலும் கடைசி நொடியில் தப்பித்துள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இந்த விபத்து குறித்து அதிர வைக்கும் உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது. முதலில் இந்த விபத்தில் இயக்குனர் சங்கர் காயம் அடைந்தார். அவரின் கால் உடைந்தது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவருக்கு லேசான காயம்தான் ஏற்பட்டது. கால் உடையவில்லை. பொய்யான செய்திகள் பரவுகிறது . இதை நம்ப வேண்டாம், என்று படக்குழு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

கமல்

கமல்

இந்த விபத்து நடந்த போது படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் இருந்திருக்கிறார். சரியாக விபத்து நடந்ததற்கு 10 நிமிடங்களுக்கு முன்தான் கமல்ஹாசன் அங்கிருந்து சென்று இருக்கிறார். அவர் வீட்டிற்கு சென்ற பின்பே இந்த விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கமல்ஹாசனுக்கு இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் கமல்ஹாசன் இதற்கு இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காஜல் எப்படி

காஜல் எப்படி

அதேபோல் காஜல் அகர்வால் இந்த விபத்து நடந்த போது படப்பிடிப்பு தளத்தில்தான் இருந்திருக்கிறார். அவர் சரியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்த போதுதான் விபத்து நடந்துள்ளது. அதேபோல் அவர் இருந்த பகுதிக்கு மேலே இருந்த கிரேன்தான் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.கிரேன் கீழே விழும் ஒரு நிமிடத்திற்கு முன்தான் அங்கிருந்து காஜல் அகர்வால் வெளியே வந்துள்ளார்.

சிக்கி இருப்பார்

சிக்கி இருப்பார்

அவர் வெளியே வந்த சில நொடிகளில் கிரேன் கீழே விழுந்துள்ளது. இதை நேரில் பார்த்த காஜல் அகர்வால் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தார்.மன ரீதியாக இந்த சம்பவம் காஜல் அகர்வாலை பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து மனதை வெளியே கொண்டு வர காஜலுக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அவ்வளவு பாதிப்பை இது ஏற்படுத்தி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X