கிருஷ்ணா.. இவ்வளவு சீக்கிரம் போயிட்டியே.. கமலுக்கு போன் செய்த பூஜா குமார்.. கண்ணீர் விட்டு கதறல்!

இந்தியன் 2 படத்தின் ஷாட்டிங்கின் போது நடைபெற்ற விபத்துக்கு நடிகை பூஜா குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஷாட்டிங்கின் போது நடைபெற்ற விபத்துக்கு நடிகை பூஜா குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

விபத்து எப்படி

விபத்து எப்படி

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து நடிகை பூஜா குமார் டிவிட் செய்துள்ளார். அதில் இந்த மோசமான விபத்து எனக்கு பெரிய அதிர்ச்சிக்கு அளிக்கிறது. வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் பலியானர்வர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு விருப்பமான கிருஷ்ணாவின் மரணம் பெரிய அதிர்ச்சசி அளிக்கிறது.

விஸ்வரூபம் படம்

விஸ்வரூபம் படம்

நான் கிருஷ்ணாவுடன் விஸ்வரூபம் படத்தின் போது பணியாற்றினேன். அந்த நினைவுகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நீங்கள் இவ்வளவு வேகமாக எங்களை விட்டு பிரிந்துவிட்டீர்கள், என்று மிகவும் வருத்தமாக பூஜா குமார் டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அவரின் டிவிட்டிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இவர் இது தொடர்பாக நடிகர் கமல் ஹாசனிடம் போன் செய்து விசாரித்து இருக்கிறார்.

பலியானார்

பலியானார்

இந்த விபத்தில் பலியான கிருஷ்ணா இந்தியன் 2 படத்தின் உதவி இயக்குனர் ஆவார். இவர் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கம் ஆனவர். இவர் விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன்பின் கமலின் சிபாரிசின் பெயரில் இவர் சங்கரிடம் பணிக்கு சேர்ந்தார். தற்போது இவர் விபத்தில் பலியானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூஜா குமார்

நடிகை பூஜா குமார் விஷ்வரூபம் 1 மற்றும் 2 பார்ட் படத்தில் நடித்து இருக்கிறார். கமலின் குடும்பத்தில் ஒருவராக இவர் இப்போது பார்க்கப்படுகிறார். கமலுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட விபத்திற்கு கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X