மது இறந்ததை நம்பவே முடியலை.. அஜித், ரஜினிக்கு நெருக்கம்.. இந்தியன் 2 விபத்தால் கதறி அழுத படக்குழு!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் படத்தின் தயாரிப்பு உதவியாளர் மது பலியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் படத்தின் தயாரிப்பு உதவியாளர் மது பலியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மது எப்படி

மது எப்படி

இந்த படத்தின் தயாரிப்பு உதவியாளர் மது பலியானதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பு உதவியாளர் மது கோலிவுட்டில் கொஞ்சம் பிரபலம் ஆனவர். கோலிவுட்டில் இயக்குனர்கள் மத்தியில் இவருக்கு நிறைய பெயர் இருக்கிறது. முக்கியமாக முன்னணி இயக்குனர்களின் படங்கள் பலவற்றிற்கு இவர் பணியாற்றி இருக்கிறார்.

நடிகர் ரஜினி

நடிகர் ரஜினி

இவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் இவர் தயாரிப்பு குழுவில்பணியாற்றினார். அதேபோல் விஜய் நடித்த சர்க்கார் படத்திலும் மது தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தார். அதே போல் மிக முக்கியமாக நடிகர் அஜித் நடித்த, நேர்கொண்ட பார்வை படத்திலும் தயாரிப்பு குழுவில் பணியாற்றினார். வலிமை படத்தில் தயாரிப்பு ரீதியாக சில உதவிகளை செய்து வந்தார்.

படம் ஷூட்டிங்

படம் ஷூட்டிங்

இவர் பட ஷூட்டிங்கின் போது கடினமாக உழைக்கா கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் உழைப்பை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். நடிகர் அஜித் நேரில் அழைத்து இவரை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இவர் நடிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இவரின் இழப்பு கோலிவுட்டில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மது பலியானதை நம்பவே முடியவில்லை என்று படக்குழுவை சேர்ந்தவர்கள் கண்ணீர்விட்டு வருகிறார்கள்.

வீட்டிற்கு போன்

வீட்டிற்கு போன்

இவரின் வீட்டிற்கு போன் செய்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முக்கியமான நடிகர்கள் சிலரும் மதுவிற்கு கால் செய்து இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த ஷூட்டிங்கில் பலியான சந்திரன் மிக முக்கியமான துணை இயக்குனர். இவர் சங்கரின் எந்திரன் 2 படத்திலும் பணியாற்றி தனியாக படம் எடுக்க முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X