நீங்க செம பாஸ்.. கலக்கிட்டீங்க.. கொண்டாடும் கோலிவுட்.. அசர வைத்த சிம்பு பட தயாரிப்பாளர்!
மாநாடு படத்தில் பணியாற்றும் எல்லோருக்கும் இன்சூரன்ஸ் எடுத்ததன் மூலம் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணையம் முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார்.
சென்னை: மாநாடு படத்தில் பணியாற்றும் எல்லோருக்கும் இன்சூரன்ஸ் எடுத்ததன் மூலம் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணையம் முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படக்குழு இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

பலி ஆனார்கள்
இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்து குறித்து அதிர வைக்கும் உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்கு சின்ன விதிமீறல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். நேற்று படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த லைட் கீழ் விழுந்துதான், இந்த விபத்து ஏற்பட்டது.

இதுதான் காரணம்
பொதுவாக கிரேன்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் எடை வைக்க முடியும். இதையும் தாண்டி அதிக எடை வைத்ததால்தான் இப்படி கிரேன் கீழே விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பா லைகா நிறுவனத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

என்ன இப்போது
இந்த விபத்து முடிந்துள்ள நிலையில் தற்போது மாநாடு படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது. இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

என்ன செய்தார்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி மாநாடு படத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ 30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்து இருக்கிறார். இதற்காக அவர் 8 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்து படக்குழு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளது.

ஆனந்த கண்ணீர் சந்தோஷம்
அதேபோல் இணையத்திலும் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். சிம்பு பட தயாரிப்பாளர் இப்படி செய்தது மிகவும் சிறப்பானது, அவரை வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். சுரேஷ் காமாட்சியின் இந்த நடவடிக்கையை கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களும் பாராட்டி வருகின்றனர். அவர்களும் இதேபோல் விரைவில் செயல்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











