பயில்வான் ரங்கநாதனை மேடையிலேயே பங்கம் பண்ண இந்தியன் 2 நடிகர்.. நகுல் பட விழாவில் செம சம்பவம்!
சென்னை: நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், நகுல் மற்றும் பயில்வான் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேடை ஏறி பேசிய நடிகர் ஜெகன் பயில்வான் ரங்கநாதனை பங்கமாக கலாய்த்ததும் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றது அங்கிருந்தவர்களை பரபரப்பாக்கியது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, மனோபாலா, எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் ஜெகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தியன் 2 படத்தை பற்றி பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்ததாகவும் அவரது யூடியூப் சேனல் குறித்தும் ஜெகன் வாஸ்கோடகாமா இசை வெளியீட்டு விழாவில் பேசிய காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
பயில்வான் ரங்கநாதனை பங்கம் பண்ண ஜெகன்: நகுல் நடிப்பில் உருவாகி உள்ள வாஸ்கோடகாமா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தேவயாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். அந்த படத்தில் நடித்துள்ள ஜெகன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் இடையே இன்று நடைபெற்ற விழாவில் மோதல் வெடித்தது. நகுலை பெருமையாக பேச நினைத்த ஜெகன் அவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும், அறிவாளியாக இருக்கிறார். எப்படி என்று கேட்டதற்கு, யூடியூபில் வீடியோக்களை பார்க்கிறேன் என்றார். உடனடியாக பயில்வான் ரங்கநாதன் குறுக்கிட, அய்யய்யோ நீங்க பேசுற மாதிரியான யூடியூப் வீடியோக்களை சொல்லல சார், அவர் நல்ல அறிவை வளர்க்கும் வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார் என்றார். உங்க யூடியூப் வீடியோக்களை பார்த்தால் தேவையில்லாததை தான் தெரிந்துக் கொள்ள முடியும், உங்க கமெண்ட் செக்ஷனை ஆஃப் பண்ணிடுங்க என்றார்.
கடுப்பான பயில்வான் ரங்கநாதன்: ஜெகன் ஏன் உருப்படாமல் இப்படியே இவ்வளவு நாளாக இருக்காரே என நினைத்தேன். ஆனால், அவருடைய வாய்க்குத்தான் அவர் இப்படி இருக்கிறார் என அடுத்ததாக மேடையேறி மைக் பிடித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் படத்தை பற்றி பேசுவதை விட டைரக்ட்டாக ஜெகனை திட்டியே பேசி விட்டார். இந்தியன் 2 படத்தில் ஜெகன் நடித்ததை பாராட்டித்தான் பேசியிருந்தேன். அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன், ஒரு படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்று தான் சொல்ல முடியும். விமர்சகர்களை திட்டக் கூடாது என்று பொங்கி விட்டார்.
சைலன்டா சிரித்த சாந்தனு: பயில்வான் ரங்கநாதன் டென்ஷன் ஆனதையும் நண்டு ஜெகன் பயில்வான் ரங்கநாதன் பற்றி பேசியதையும் பயில்வான் ரங்கநாதன் அருகே அமர்ந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த சாந்தனு சைலன்ட்டாக சிரித்துக் கொண்டிருந்த காட்சிகளையும் கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேவயாணி மற்றும் நகுலுக்குத்தான் உள்ளுக்குள் தங்கள் பட புரமோஷன் விழாவில் சண்டை வெடித்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











