அஜித் தான் ஏமாத்தினார்னா... இப்போ கமலுமா?.. பாவம்ங்க கார்த்தி ஹீரோயின்!

தொடர் பட தோல்விகளால் நடிகை காஜல் அகர்வால் பெரும் வருத்தம் அடைந்துள்ளாராம்.

சென்னை: தொடர்ந்து பட தோல்விகளாலும், இந்தியன் 2 படம் மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவு தவிடுபொடியானதாலும் சோகத்தில் இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தனது துறுதுறு நடிப்பால் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு திறமையான நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது கார்த்தியுடன் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தான்.

இந்நிலையில் சில காலம் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காஜல், விவேகம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.

விவேகம்:

விவேகம்:

பெரும்பாலும் அஜித் படத்தில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இருக்கும். எனவே அப்படம் மூலம் மீண்டும் தமிழில் தனக்கொரு இடம் கிடைக்கும் என நம்பினார் காஜல். படத்தில் அவர் நடிப்பதற்கென்று நிறைய காட்சிகள் இருந்தும், அப்பட தோல்வியால் காஜலுக்கு வேறு வாய்ப்புகள் அமையவில்லை.

இந்தியன் 2 வாய்ப்பு:

இந்தியன் 2 வாய்ப்பு:

அதனைத் தொடர்ந்து இந்தியன் 2வில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கமல், ஷங்கர் என மிகப்பெரிய கூட்டணி, ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் என பல பிளஸ்கள் இருந்ததால், உடனடியாக ஓகே சொன்னார் காஜல். ஜனவரி மாதம் நடைபெற்ற படப்பூஜையிலும் கலந்து கொண்டார்.

ஏமாற்றிய கமல் படம்:

ஏமாற்றிய கமல் படம்:

மேக்கப் டெஸ்ட் முடிந்து விட்டது, ஜூனில் படப்பிடிப்பு என அவ்வப்போது இந்தியன் 2 பற்றிய அப்டேட்டுகளைத் தந்த வண்ணம் இருந்தார். ஆனால், இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ள இந்தியன் 2 பட வேலைகள் இப்போதைக்கு மீண்டும் ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை. இதனால் இந்தியன் 2 படமும் காஜலின் கனவை நிஜமாக்கவில்லை.

சீதாவும் தோல்வி:

சீதாவும் தோல்வி:

இதற்கிடையே, தெலுங்கில் பெல்லம் கொண்ட சீனிவாஸ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா படம் கடந்த மாதம் ரிலீசானது. இந்த படம் வெற்றி பெற்றால், தெலுங்கில் மேலும் படவாய்ப்புகள் வரும் என்று காஜல் நம்பினார். ஆனால் அந்த படமும் ரூ. 8 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி, எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது. இது காஜல் அகர்வாலுக்கு மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோமாளி நம்பிக்கை:

கோமாளி நம்பிக்கை:

இதனால், இந்தி குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் மற்றும் ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தின் ரிசல்டைத் தான் காஜல் பெரிதும் நம்பியுள்ளார். ஏற்கனவே வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் பெரும் மன வருத்தத்தில் இருக்கிறாராம் காஜல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X