தெரிந்தே பெரிய ரிஸ்க் எடுக்கும் அனிருத்: தைரியம் தான்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளார்.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தை அடுத்து கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்தியன் படத்தை போன்றே இதற்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டும் என்று கமல் விரும்பினார். ஆனால் இயக்குநர் ஷங்கரோ அனிருத்தை ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் இது குறித்து அனிருத் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஷங்கர்
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே ஷங்கர் சார் எனக்கு போன் செய்து இந்தியன் 2 கதையை சொல்லி நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்றார். ஆனால் 2.0 படம் தாமதமானதால் இந்தியன் 2 படமும் தாமதமாகிவிட்டது. நான் ஷங்கர் சாரின் தீவிர ரசிகன். அப்படி இருக்கும்போது அவர் படத்தில் வேலை செய்வதை நினைத்து மகிழ்ச்சியில் குதித்தேன்.

கமல் ஹாஸன்
எனக்கு பிடித்த இயக்குநர் ஷங்கர் சார். மேலும் நான் கமல் சாருடன் சேர்ந்து வேலை செய்தது இல்லை. கமல் சாரின் சிறந்த படங்களில் ஒன்று இந்தியன். இந்தியன் 2 படத்தில் வேலை செய்வதன் மூலம் என் கனவு நிறைவேறியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்
இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்தால் ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையுடன் என் இசையை ஒப்பிடுவார்கள் என்று தெரியும். ரஹ்மான் சார் செய்த மேஜிக்கை என்னால் அப்படியே செய்ய முடியாது. ஆனால் நான் என்னுடயை பெஸ்ட் டியூனை போடுவேன். தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான். அதனால் ரஹ்மான் சார் இசையுடன் என் இசையை ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறப்பு
ஷங்கர் சார் எனக்கு நண்பர் போன்றவர். ஒரு 25 வயது இயக்குநருடன் வேலை செய்வது போன்று உள்ளது. அவர் என்னுடன் அப்படித் தான் பேசுகிறார். பாதி ஆல்பம் பணி முடிந்துவிட்டது. ஆல்பம் சிறப்பாக வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











