’கதற விடுறோம்’ இந்த வீடியோவுக்கு கச்சிதமா இருக்கே.. அனிருத் சம்பவம் ’விக்ரம்’ படத்துக்கு செட்டாகுதே!
சென்னை: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்த ’கதற விடுறோம்’ பாடலுக்கு எதிரான கதறல்கள் சோஷியல் மீடியாவில் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த பாடல் விக்ரம் படத்துக்கு கச்சிதமாக பொருந்துவது போன்ற எடிட்டிங் ரசிகர்கள் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.
”ஒய் திஸ் கொலவெறி”, ”ஆலுமா டோலுமா”, ”வாத்தி கம்மிங் ஒத்து”, ”அரபிக் குத்து”, “பத்தல பத்தல”. ”காவலா”, ”ஹுகும்”, “நான் ரெடி” என ஏகப்பட்ட வெறித்தனமான பாடல்களை அனைத்து ஹீரோக்களுக்கும் இசையமைத்து அட்டகாசம் செய்து வரும் அனிருத் தற்போது இந்தியன் தாத்தாவுக்கு “தாத்தா வராரு, கதறவிட போறாரு” என பாட்டு போட்டுள்ளார்.

இந்தியன் படத்தின் பாடல்களுடன் கம்பேர் செய்து ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் அனிருத் பாடல்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இந்த காலத்து 2கே கிட்ஸ்களுக்கு ஏற்ற பாடலாக அனிருத் போட்டுள்ளார் என கமல் ரசிகர்கள் தற்போது அந்த பாடலை மிகப்பெரிய ஹிட் பாடலாக மாற்றி வருகின்றனர்.
விக்ரம் 2 ஆண்டுகள் கொண்டாட்டம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை முன்னிட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் விக்ரம் 2 இயர்ஸ் செலிபிரேஷனை சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். விஸ்வரூபம் 2 தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு 4 ஆண்டுகளாக எந்த ஒரு படமும் வெளிவராத நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று ஹிண்டஸ்ட்ரி ஹிட்டும் அடித்தது.
விஜய், ரஜினி படங்கள்: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. லியோ படத்தை முடித்த நிலையில். அடுத்ததாக ரஜினிகாந்தின் கூலி படத்தையும் அவர் இயக்க உள்ளார். மேலும், கைதி 2, ரோலக்ஸ் மற்றும் விக்ரம் 3 என அந்த எல்சியூவை கம்ப்ளீட் செய்யவும் லோகேஷ் கனகராஜ் காத்திருக்கிறார்.
கதறவிடுறோம் கச்சிதமா இருக்கே: இந்தியன் 2 படத்துக்காக அனிருத் இசையமைத்த கதறவிடுறோம் பாடல் விக்ரம் படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அளவுக்கு ரசிகர்கள் எடிட் செய்து ட்விட்டரில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். விக்ரம் படத்தை போலவே கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தக் லைஃப்: ஒரு பக்கம் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் மற்றும் இன்னொரு பக்கம் சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன் தனது மகளையும் லோகேஷ் கனகராஜையும் வைத்து இனிமேல் ஆல்பம் பாடலையும் தயாரித்து வெளியிட்டார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து படத்தை தொடங்கி வைத்த கமல்ஹாசன் நாயகன் படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் 3 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











