twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘இந்தியன் 2’ மேல்முறையீட்டு வழக்கு… ஷங்கர், லைகா நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை!

    |

    சென்னை : இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேச்சு வார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கபட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

    கமலின் இந்தியன் 2 வருமா ? வராதா ?... தீவிரமாக நடக்கும் சமரச பேச்சுவார்த்தை கமலின் இந்தியன் 2 வருமா ? வராதா ?... தீவிரமாக நடக்கும் சமரச பேச்சுவார்த்தை

    இந்தியன் 2

    இந்தியன் 2

    கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கும் இந்தியன் - 2, படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்த நிலையில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியன் -2 பெரும் பிரச்னையை சந்தித்தது.

    பிரச்சனை வெடித்தது

    பிரச்சனை வெடித்தது

    ஈவிபி-யில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து நடக்க இதில் மூன்று பேர் உயிரிழந்தார்கள். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் என மூவருக்கும் இடையே பிரச்னை உருவானது. அத்தோடு ஷங்கர் பட்ஜெட்டை மீறிப்போவதாக குற்றம்சாட்டியது லைகா நிறுவனம். இதனால் பிரச்சனை பெரிதானது.

     லைக்கா நிறுவனம் வழக்கு

    லைக்கா நிறுவனம் வழக்கு

    இந்தியன்2 திரைப்படம் தள்ளிப்போனதால்,அடுத்த படங்களின் மேல் கவனத்தை திரும்பினார் ஷங்கர், இதையடுத்து, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேல்முறையீட்டு மனு

    மேல்முறையீட்டு மனு

    தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, லைக்கா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 6ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, லைக்கா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைக்கா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல், விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

    பேச்சுவார்த்தையில் உள்ளது

    பேச்சுவார்த்தையில் உள்ளது

    இந்த நிலையில், லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா மற்றும் சங்கர் தரப்பில் தனிபட்ட முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்ச்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் பேச்சு வார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கபட்டது. இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்று சங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

    English summary
    The makers of Lyca Productions has filed a case against director Shankar in Madras High Court seeking a ban on him to direct any other film before the completion of Kamal Haasan-starrer Indian 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X