பாவம் கமல்! செல்ஃப் எடுக்காமல் திணறும் சேனாபதி! இந்தியன் 2 முதல் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படி இருந்தும் முதல் பாதியில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. அதேபோல் இரண்டாம் பாதியில் டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக வரிசையாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் முதல் படமாக ரிலீஸ் ஆனது உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம்தான். இந்த படத்தின் வசூல் விபரம் குறித்து இங்கு காணலாம்.
இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த்,பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

படத்தினை அதிகப்படியான பட்ஜெட் செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமானது. அதேபோல், படத்தின் ட்ரைலர் பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போனது. மேலும் படக்குழு வெளியிட்ட கதறல் பாடல் பள்ளி வயதுக் குழந்தைகள் வரை சென்று சேர்ந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இப்படியான பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் படம் ரொம்ப நேரம் ஓடுவதால் சலிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு தரப்பில், படத்தின் நீளத்தை 3 மணி நேரங்களில் இருந்து 2 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

வசூல்: இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி முதல் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது தொடர்பாக தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. அதன்படி. படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 26 கோடிகள் வசூல் செய்துள்ள்து என கூறப்பட்டது. இதனால் இரண்டாவது நாளான நேற்று மட்டும் இந்தியா முழுவதும், கிட்டத்தட்ட ரூபாய் 17 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது இரண்டாவது நாளில் தமிழில் மட்டும் ரூபாய் 13 கோடியும், ஹிந்தியில் 1.2 கோடியும், தெலுங்கில் ரூபாய் 2.5 கோடியும் வசூல் செய்துள்ளது.

நம்பிக்கை: முதல் இரண்டு நாட்களும் சேர்த்து படம் மொத்தம், கிட்டத்தட்ட ரூபாய் 42.3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதால், படம் குறித்த பார்வை ரசிகர்கள் மத்தியில் மாறும் எனவும் இதனால் ரசிகர்கள் தியேட்டருக்கு குடும்பங்களுடன் வருவார்கள் எனவும் படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications











