முடங்கிய வசூல்! எடிட் செய்தும் எடுபடாத இந்தியன் தாத்தா! நம்பிக்கையை இழந்த படக்குழு!

சென்னை: 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படி இருந்தும் முதல் பாதியில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. அதேபோல் இரண்டாம் பாதியில் டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக வரிசையாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் முதல் படமாக ரிலீஸ் ஆனது உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம்தான். இந்த படத்தின் வசூல் விபரம் குறித்து இங்கு காணலாம்.

இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த்,பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

Indian 2 Box Office Collection Kamal Haasan 2

படத்தினை அதிகப்படியான பட்ஜெட் செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமானது. அதேபோல், படத்தின் ட்ரைலர் பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போனது. மேலும் படக்குழு வெளியிட்ட கதறல் பாடல் பள்ளி வயதுக் குழந்தைகள் வரை சென்று சேர்ந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இப்படியான பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் படம் ரொம்ப நேரம் ஓடுவதால் சலிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு தரப்பில், படத்தின் நீளத்தை 3 மணி நேரங்களில் இருந்து 2 மணி நேரம் 45 நிமிடங்களாக குறைத்து எடிட் செய்து ரிலீஸ் செய்தது. இந்த எடிட் செய்யப்பட்ட காட்சிகள் நேற்று முதல் அதாவது ஜூலை 16ஆம் தேதியில் இருந்து திரையிடப்பட்டது.

வசூல்: இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் ஐந்து நாட்கள் ஆவதால், இந்த ஐந்து நாட்களில் படத்தின் வசூல் எவ்வளவு வசூல் செய்தது என்பது தொடர்பாக தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி. படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 26 கோடிகளும், இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும், கிட்டத்தட்ட ரூபாய் 18.2 கோடியும், மூன்றாவது நாளில் ரூபாய் 15.35 கோடிகளும் வசூல் செய்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் படம் தலா ரூபாய் மூன்று கோடிகள் வீதம் ரூபாய் 6 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில், இதுவரை படம் ரூபாய் 65.15 கோடிகளை வசூல் செய்துள்ளது.

வேதனையில் தயாரிப்பு நிறுவனம்: படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் படம் நினைத்த அளவிற்கு போகாததால் லைகா நிறுவனத்திற்கு பெரிய இழப்பாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பில் ரெட் ஜெய்ண்ட் நிறுவனமும் இணைந்தது எனக் கூறினாலும் அதிகப்படியான பொருட்செலவைச் செய்தது லைகா நிறுவனம்தான் என்பதால் லைகா பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X