இந்தியன் 2 கதையை கேட்டப்ப புல்லரிச்சுது.. இந்தப் படம் மாஸ் ஹிட்தான் -ரவிவர்மன் சொன்னத பாருங்க!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2.
Recommended Video
ஷங்கர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு சூட்டிங் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் பல படங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தவை. அந்த வரிசையில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான இந்தியன் படத்திற்கும் இடம் உண்டு. ஊழலுக்கு எதிரான சுதந்திர போராட்ட வீரரின் போராட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிரட்டியது.

இந்தியன் 2 சூட்டிங்
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த சில மாதங்கங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் இந்தியன் 2 சூட்டிங்
தொடர்ந்து படத்தின் சூட்டிங்கை மீண்டும் துவங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இதையடுத்து ராம் சரணின் ஆர்சி 15 படத்தை இயக்கத்துவங்கினார் ஷங்கர். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் களையப்பட்டு மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

சூட்டிங்கில் பங்கேற்கும் கமல்
சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ள இந்த சூட்டிங்கில் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதனிடையே வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சூட்டிங்கில் கமல் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் வாக்கில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புல்லரிப்பை கொடுத்த கதை
இந்நிலையில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ள ரவிவர்மன் படம் குறித்து தன்னுடைய கருத்துக்களை தற்போது பகிர்ந்துள்ளார். இந்தப் படம் இந்தியன் படத்தை காட்டிலும் பல மடங்கு சிறப்பாக அமையும் என்றும் படத்தின் கதையை கேட்ட தனக்கு புல்லரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வியப்பை கொடுத்த கதைக்களம்
ஷங்கர் இயக்கத்தில் தனக்கு இந்தியன் மற்றும் முதல்வன் படங்களே மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக, அந்தப் படத்தை மிஞ்சும் கதைக்களத்துடன் உருவாகுவது தனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரவிவர்மன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எகிறிய எதிர்பார்ப்பு
லைகா தயாரித்துவரும் இந்தப் படத்தில் ரெட் ஜெயண்ட் மூவிசும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான இந்தப் படம் ரசிகர்களுக்கு எந்தவிதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











