இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்.. அட இது வெற்றிமாறன் ஃபார்முலாவாச்சே!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. கமல்ஹாசனுக்கு தேசிய விருதையும் அந்த படம் பெற்றுத் தந்தது. இந்தியன் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய பல படங்கள் பிரம்மாண்டமாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இந்தியன் படம் அளவுக்கு விருதுகளை குவித்த படமாகவோ இன்டென்ஸான படமாகவோ எதுவுமே அமையவில்லை.

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான பிரம்மாண்ட புரமோஷன்களை ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த படம் இந்தியன் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் இந்தியன் 3 படம் முதல் பாகத்தையே மிஞ்சும் என்பதால் தான் கமல்ஹாசன் அந்த படத்தை தொடர்ந்து சிலாகித்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

Indian 2 Kamal Haasan Shankar 2

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன. மேலும், இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் படத்தில் எப்போது வருவார் என்றும் கூறுகின்றனர்.

இன்டர்வெலுக்கு முன் தாத்தா என்ட்ரி:
விக்ரம் படத்தை போலவே ஆரம்பத்தில் கமல்ஹாசனை காட்டி விட்டு அதன் பின்னர், இடைவேளையில் அவரது என்ட்ரியை கொடுப்பது போல இந்தியன் 2 படத்தில் ஆரம்பத்தில் இந்தியன் 1 காட்சிகளை காட்டி விட்டு அதன் பின்னர், ஊழலுக்கு எதிராக சித்தார்த் போராடுவதும், ஒரு கட்டத்தில் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் இடைவேளைக்கு முன்பு என்ட்ரி கொடுத்து சித்தார்த்தை காப்பாற்றுவார் என்றும் இப்படித்தான் இந்தியன் 2 படத்தின் முதல் பாதி இருக்கும் எனக் கூறுகின்றனர்.

கிளைமேக்ஸ் எப்படி?: அதேபோல இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது கமல்ஹாசனுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையேயான பிரச்சனை வெடிக்கும் என்றும் இந்தியன் 3 படத்தில் சேனாபதியின் அப்பா கதாபாத்திரத்தை காட்டவுள்ள நிலையில், அதுகுறித்த க்ளிம்ப்ஸ் காட்சியை வெளியிடுவார்கள் எனக் கூறுகின்றனர்.

வெற்றிமாறன் ஃபார்முலா: விடுதலை படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் காட்சிகளை க்ளிம்ப்ஸாக காட்டியதை போல இந்தியன் 2 படத்தின் இறுதியில் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சிகளாக இந்தியன் 3 படத்தின் காட்சிகளும் வரும் என்றும் நிச்சயம் அதை பார்த்து விட்டால் இந்தியன் 3 படத்திற்கான எதிர்பார்ப்பும் இந்தியன் 2 படத்திற்கான கூட்டமும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்: புக் மை ஷோ, பிவிஆர் உள்ளிட்ட செயலிகளில் இந்தியன் 2 படத்துக்கான டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவை போலவே ஓவர்சீஸிலும் விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2.0 படம் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி 800 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஷங்கருக்கு மேலும், ஒரு பிரம்மாண்ட வசூல் வேட்டை படமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டஸ்ட்ரியிலும் இந்தியன் 2 படத்தை பற்றிய பேச்சுகள் சிறப்பாகவே உள்ளதாக கூறுகின்றனர். மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோரின் நடிப்பை ரசிகர்கள் மீண்டும் ரசிக்க காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X