twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது... அதிரடி உத்தரவு போட்ட கோர்ட்

    |

    ஐதராபாத் : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று கமல் நடிக்கும் இந்தியன் 2. ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் வேலைகள், கிட்டதட்ட ஓராண்டிற்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த விவேக் திடீரென மரணமடைந்ததால், வேறு ஒருவரை வைத்து விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஷங்கர் கூறி உள்ளார்.

     தள்ளி போன இந்தியன் 2

    தள்ளி போன இந்தியன் 2

    2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 செட்டில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டார் ஷங்கர்.

    வழக்கு தொடர்ந்த லைகா

    வழக்கு தொடர்ந்த லைகா

    ஆனால் படத்தின் தாமதத்திற்கு டைரக்டர் ஷங்கர் தான் காரணம் என கூறி லைகா நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தது லைகா நிறுவனம்.

    லைகா தான் தாமதத்திற்கு காரணம்

    லைகா தான் தாமதத்திற்கு காரணம்

    இதனை மறுத்து பதில் மனு தாக்கல் செய்த ஷங்கர், பட்ஜெட் தொகையை ஒதுக்காமல் லைகா நிறுவனம் தான் தாமதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில் சமரசம் பேசவும் கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா பிடிவாதமாக கோர்ட்டில் கேட்டு வந்தது.

    ஐதராபாத் கோர்ட்டிலும் வழக்கு

    ஐதராபாத் கோர்ட்டிலும் வழக்கு

    இந்நிலையில், இரு தரப்பும் வாதங்களை பதில் மனுவாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தன. இதற்கிடையில் ஐதராபாத் ஐகோர்ட்டிலும் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அங்கேயும் ஷங்கருக்கு தடை விதிக்க கோரியது.

     தடை விதிக்க முடியாது

    தடை விதிக்க முடியாது

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்கு எதிராக தடை விதிக்க மறுத்து, லைகா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் ஷங்கர் தரப்பு வாதங்களை தாக்கல் செய்யவும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

    English summary
    the judge who presided over the hearing declined to grant the producer's request for a stay order against Shankar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X